சீமானுக்கு எதிராக துண்டறிக்கை.. ஈரோட்டில் நாதக - தபெதிக இடையே மோதல்.. என்ன நடந்தது?
ஈரோடு: ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தல் பரப்புரையின் போது தபெதிகவினர் சீமான் மற்றும் நாதகவிற்கு எதிராக துண்டறிக்கை விநியோகித்த போது மோதல் ஏற்பட்டிருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்.5ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் நேருக்கு நேர் மோதியுள்ளனர். திமுக தரப்பில் விசி சந்திரகுமாரும், நாதக தரப்பில் சீதாலட்சுமியும் வேட்பாளர்களாக போட்டியில் இருக்கின்றனர். நாளை மாலையுடன் பிரச்சாரம் முடிவடைய உள்ள நிலையில், இரு தரப்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றது.

இதனிடையே கடந்த ஒரு மாதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து கொச்சையாக விமர்சித்து வருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பெரியாரிய ஆதரவு இயக்கங்களும் கண்டனம் தெரிவித்தனர். ஆனாலும் பெரியாரை விமர்சித்து பேசுவதை சீமான் தொடர்ந்து செய்து வந்தார்.
பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டிலேயே இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது கடுமையாக விமர்சித்தார். வெங்காயம் என்றெல்லாம் விமர்சித்ததால், சீமான் மீது கடுமையாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. ஏற்கனவே அவரை கண்டித்து பல்வேறு இயக்கங்களும் ஆர்ப்பாட்டத்திலும், போராட்டத்திலும் ஈடுபட்டன.

இந்த நிலையில் ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கும், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பெரியாரை கடுமையாக விமர்சித்து வரும் சீமானை கண்டித்து, தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் துண்டறிக்கையை விநியோகித்து வந்துள்ளனர். அதே நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி பன்னீர்செல்வம் பூங்கா அமைந்துள்ள தேவாலயத்தில் இருந்து வெளியில் வருவோரிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையில் யார் துண்டறிக்கை கொடுப்பது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், இரு தரப்பினரும் மோதிக் கொண்டுள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதனால் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications