200 சீட்களை தவெக வெல்லும்.. விஜய் தான் தமிழ்நாட்டை ஆளப்போகிறார்.. செங்கோட்டையன் உறுதி!
ஈரோடு: தமிழ்நாட்டில் தவெக 200 தொகுதிகளில் வென்று, விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று அக்கட்சியின் மூத்த நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மக்கள் அலை அதிகமாக இருப்பதாக கூறிய செங்கோட்டையன், மே 4ஆம் தேதி நடக்கப் போகும் விசில் புரட்சியை உலகமே வியந்து பார்க்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தமாக 4.88 கோடி வாக்களித்த நிலையில், 85.15% வாக்குகள் பதிவாகியது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. அதில் எந்த எக்ஸிட் போல்-ம் தவெக 20 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று சொல்லவில்லை.

ஆனால் ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனம் மட்டும் தவெக 98 இடங்கள் முதல் 120 இடங்கள் வரை செல்லும் என்று எக்ஸிட் போல் முடிவில் கூறி இருக்கிறது. இது தவெகவினர் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஏற்கனவே தேர்தலுக்கு பின் யாரை கேட்டாலும் விசில் சின்னத்திற்கு வாக்களித்ததாக கூறி வருவது விவாதமாகி இருக்கிறது.
இந்த நிலையில் எக்ஸிட் போல் முடிவுகள் தொடர்பாக தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எக்ஸிட் போல் தொடர்பாக தெளிவுபடுத்த விரும்புகிறேன். நிச்சயமாக தவெக 120 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெறும். இலங்கை, வங்கதேசம், நேபாளம், பஞ்சாப் உள்ளிட்ட தேர்தல்களில் வந்த கருத்துக்கணிப்புகள் பொய்யாகியது. அதில் மாற்றம் ஏற்பட்டது.
மக்களின் அலை அதிகமாக இருக்கிறது. இதுவரை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவின் வரலாற்றிலேயே இப்படியொரு புரட்சியை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். விஜய்யின் விசில் புரட்சியை மே 4ஆம் தேதி உலகமே பார்க்க போகிறது. 200 தொகுதிகளில் தவெக கட்டாயம் வெல்லும். தமிழ்நாட்டை விஜய் தான் ஆளப் போகிறார். இது மக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ள ஒன்று என்று தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் செங்கோட்டையன் மீண்டும் போட்டியிட்டுள்ளார். தொடர்ச்சியாக 8 முறை அந்த தொகுதியில் வென்ற செங்கோட்டையன், இம்முறையும் தவெக சார்பாக போட்டியிட்டு வெல்வார் என்று சொல்லப்படுகிறது. அதிமுகவின் வாக்குகளும் அந்த தொகுதியில் செங்கோட்டையன் கைப்பற்றுவதோடு, இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாக்குகளையும் எடுப்பதாக தெரிகிறது.
-
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
தொகுதி தோறும் 2 கேமராமேன், ஒரு எடிட்டர்! தவெக எம்எல்ஏ-க்களுக்கு கட்சி தலைமை போட்ட 'இன்ஸ்டா' உத்தரவு! -
ஸ்மார்ட் மீட்டர், பரந்தூர், ECR பாலம்! முக்கிய திட்டங்களை முடக்கிய விஜய்! தமிழ்நாட்டிற்கு பேராபத்து -
திமுகவிற்கு சோதனை மேல் சோதனை.. சுற்றி நிற்கும் பருந்துகள்! தப்பவே முடியாது போலயே.. ஸ்டாலினுக்கு செக் -
ஸ்டியரிங்கை பிடித்த விஜய்.. 'சிங்கப்பெண்' திட்டத்தை தொடங்கி வைத்து கையோடு ரோந்து வாகனத்தை ஓட்டினார்! -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
பொள்ளாச்சி பாலியல் வழக்கு! பார் நாகராஜை எனக்கு தெரியாது! அவரை தவெகவில் சேர்க்கவில்லை - செங்கோட்டையன் -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications