ஸ்லீப்பர் சீட்டில் வைத்து 13 வயது சிறுமியை சீரழித்த வேன் டிரைவர்.. பாய்ந்தது போக்சோ
13 வயது சிறுமியை கற்பழித்த வேன் டிரைவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு: 13 வயது சிறுமியை ஆம்னி பஸ்சின் சிலீப்பர் சீட்டில் வைத்து நாசம் செய்த வேன் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் பகுதியை சேர்ந்தவள் 13 வயது சிறுமி. ஈரோட்டில் தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறாள். அதே பள்ளியில் வேன் டிரைவராக வேலை பார்ப்பவர்தான் விக்னேஷ், வயசு 19 ஆகிறது.
19 வயது என்றாலும், விக்னேஷூக்கு கல்யாணமாகிவிட்டது. 5 மாதத்தில் ஒரு குழந்தையும் உள்ளது. ஸ்கூலுக்கு வேனில் சிறுமி வரும்போதும், போகும்போதெல்லாம் நன்றாக சிரித்து சிரித்து பேசி பழகி வந்துள்ளார்.
சிறுமியின் செல்போன் நம்பரையும் வாங்கிவைத்து கொண்டார். பேஸ்புக், வாட்ஸ்அப் என ஒன்றுவிடாமல், எல்லாத்திலேயும் சிறுமியிடம் பேசி கொண்டே இருந்துள்ளார்.

போலீசில் புகார்
இவ்வளவு பேசினாலும் தனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை விக்னேஷ் சிறுமியிடம் மறைத்து விட்டார். ஒரு கட்டத்தில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடந்த 22ம் தேதி விக்னேஷ் கடத்தி சென்று விட்டார். சிறுமியை காணாததால் பதட்டமும் அதிர்ச்சியும் அடைந்த பெற்றோர் உடனடியாக அரச்சலூர் போலீசில் புகார் அளித்தனர்.

விக்னேஷ் கைது
அதனடிப்படையில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இறுதியாக விக்னேஷ், திருப்பூர் மாவட்டத்தில் சிறுமியை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் திருப்பூருக்கு விரைந்து சென்று, சிறுமியை மீட்டதுடன் போலீசார் விக்னேஷையும் கைது செய்து, ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.

ஸ்லீப்பர் சீட்
அப்போது நடத்திய விசாரணையில் விக்னேஷ் சொன்னதாவது: வேனில் தினமும் வரும் இந்த பெண்ணை எப்பவுமே ரொம்ப பிடிக்கும். அதனால்தான் சிரித்து பேசவே ஆரம்பித்தேன். என் பேச்சை நம்பி சிறுமி என் கூட வந்துவிடவும், ஈரோட்டில் இருந்து திருப்பூர் சென்ற ஒரு சொகுசு பஸ்ஸில் ஏறி கொண்டேன். பஸ்ஸில் ஸ்லீப்பர் சீட்டில் வைத்து சிறுமியை கற்பழித்தேன்" என்றார்.

உடந்தை
இதையடுத்து பஸ்ஸில் நடந்தது குறித்து சிறுமியிடம் கேட்டு போலீசார் உறுதிபடுத்தி கொண்டனர். மேலும் இந்த பலாத்காரத்துக்கு, ரமேஷ் 22, மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 3 பேரும் உடந்தையாக விக்னேஷூக்கு இருந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

17 வயது சிறுவன்
இதனையடுத்து விக்னேஷை கடத்தல், போக்சோ ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த 17 வயது சிறுவன், ரமேஷ் ஆகியோரை வேறு வேறு பிரிவில் கைது செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications