ராத்திரி அது வந்துச்சா.. லபக்கென பிடிச்சுட்டேன்.. பதற வைத்த பழனிச்சாமி.. ஆடிப்போன கலெக்டர் ஆபீஸ்
வினோத விலங்கு ஒன்றினை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தார் ஒருவர்
Recommended Video
ஈரோடு: "நடுராத்திரி எங்க வீட்டுக்கு ஒரு உருவம் வந்துச்சா.. நாங்க அலறிட்டோம்.. அப்பறம் அந்த உருவத்தை நான் லபக்கென பிடிச்சிட்டேன்" என்று கலெக்டர் ஆபீசில் பழனிசாமி பேசியதை கேட்டு அங்கிருந்தோர் அலறியடித்து கொண்டு ஓடினர்.
ஈரோடு கலெக்டர் ஆபீசுக்கு ஒருவர் பிளாஸ்டிக் கூடையினை எடுத்து வந்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய அங்கிருந்த போலீசார், யார் நீங்கள், என்ன வேண்டும், கையில் என்ன கூடை? என்று விசாரித்தனர்.

அதற்கு அவர், என் பெயர் பழனிசாமி, கொடுமுடியில் வீடு.. நேற்று ராத்திரி நாங்க தூங்கிட்டு இருந்தோம்.. அப்ப திடீர்ன்னு எங்க வீட்டுக்கு உள்ளே ஒரு ஒருவம் நுழைஞ்சிடுச்சு.. அதனால் நாங்க எல்லாருமே பயந்து அலறிட்டோம்.. இருந்தாலும் சுதாரிச்சிட்டு அந்த உருவத்தை லபக்கென பிடித்தேன்.. ஆனா, அதுக்கு உடம்பில் இருந்து நிறைய முள்கள் விரிந்து வந்தது.. அந்த முள்ளை வெச்சி என்னை அடிக்கவும் வந்தது.. அப்பறம் டயர்ட் ஆகி அங்கேயே சுருண்டு படுத்து கொண்டது..
அதுக்கப்பறம்தான் அதை நான் பிடிச்சேன்.. இதோ அதுதான் அந்த உருவம்.. என்று படக்கென்று, கையில் இருந்த கூடையை திறந்து காட்டினார். அதில், ஒரு வினோத விலங்கு ஒன்று சுருண்டு படுத்து கிடந்தது. இதை பார்த்ததுமே அங்கிருந்த எல்லோரும் அலறி அடித்து கொண்டு ஓடினர்.
அந்த முள்ளால் ஆன வினோத உருவத்தை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கவே கலெக்டரை சந்திக்க வந்திருப்பதாக சொன்னார். அந்த சமயத்தில்தான் காரில் வந்து இறங்கினார் கலெக்டர் கதிரவன். கூட்டம் ஒன்றாக திரண்டு கிடக்கவும், அங்கு சென்ற கலெக்டர் இதை பற்றி விசாரித்தார். "எங்கே.. அந்த உருவத்தை காட்டுங்க" என்றதும், கூடையில் வைத்திருந்த விலங்கை எடுத்து காட்டினார் பழனிசாமி.
அதை பார்த்தவுடன் கலெக்டர், "எனக்கு பயமாக இருக்கு.. இதை பத்திரமாக வெச்சுக்குங்க.. வனத்துறை அதிகாரிகள் இங்கே வரச் சொல்கிறேன்.. அவங்ககிட்ட இதை தந்துடுங்க.. அவங்க பார்த்துப்பாங்க"
என்று சொல்லவிட்டு, அங்கிருந்து காரில் கிளம்பி விட்டார். கலெக்டரே அந்த உருவத்தை கண்டு அஞ்சிய சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications