Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழுகி.. சடலமாக சுடுகாட்டில் புதைக்கப்பட்டவர்.. ராத்திரி கதவை தட்டினார்.. அலறியடித்து ஓடிய குடும்பம்

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட நபர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: சுடுகாட்டில் புதைத்துவிட்டு வந்த நபர் வீடு தேடி வந்துவிட்டதால், குடும்பத்தினர் அலறி அடித்து ஓடிய சம்பவம் ஈரோட்டில் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் புஞ்சைதுறையம் பாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி.. இவர் விவசாயம் செய்து வருகிறார்... விவசாயம் இல்லாத சமயங்களில், கரும்பு வெட்டும் பணிக்கு கர்நாடக, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கிளம்பி சென்றுவிடுவார்.

இப்படித்தான், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கரும்பு வெட்டும் பணிக்காக கிளம்பி சென்றார்.. ஆனால், வீட்டுக்கு வரவே இல்லை..

 மூர்த்தியை காணோம்

மூர்த்தியை காணோம்

எப்போது ஊர்களுக்கு சென்றாலும், கரும்பு வெட்டி முடித்ததும் உடனே திரும்பிவிடுவார்.. ஆனால் இந்த முறை வீட்டை விட்டு வேலைக்கு போனவர் திரும்பவில்லை.. இதனால் குடும்பத்தினர் பயந்துவிட்டனர்.. பல்வேறு இடங்களிலும், கரும்பு வெட்டும் இடங்களிலும் சென்று தேடி பார்த்துள்ளனர்... எந்த தகவலும் கிடைக்கவில்லை.. உறவினர்களுக்கும் போன் போட்டு விசாரித்துவிட்டனர்.. மூர்த்தியை தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால், வேறு வழியில்லாமல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தனர்...

 அழுகிய சடலம்

அழுகிய சடலம்

இந்தநிலையில் கடந்த 31-ந் தேதி சத்தியமங்கலம் பஸ் ஸ்டாண்டில் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக மூர்த்தியின் குடும்பத்தாருக்கு தகவல் கிடைத்தது.. இதனால், பதறிப்போன குடும்பத்தினர், பஸ் ஸ்டாண்டுக்கு ஓடிச்சென்றனர்.. ஆனால், அங்கிருந்த சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.. அந்த நபரின் உடைகள், உடலை பார்த்ததுமே, குடும்பமே கதறி கதறி அழுதது.. மூர்த்தியின் மகன்கள் இறந்தது தங்களது அப்பாதான் என்றும் உறுதி செய்து, சடலத்தையும் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 இறுதி சடங்குகள்

இறுதி சடங்குகள்

இதனால் போலீசாரும், வழக்கு பதிவு செய்து இறந்தவர் உடலை மூர்த்தியின் மகன்களிடம் ஒப்படைத்துள்ளனர்... வீட்டிற்கு சென்றதும் முறைப்படி இறுதி சடங்குகளும் செய்யப்பட்டு, சுடுகாட்டில் புதைத்துவிட்டு வந்தனர்.. இந்நிலையில், நேற்று நடுராத்திரி வீட்டில் கதவை தட்டும் சத்தம் கேட்டுள்ளது.. கதவை திறந்து பார்த்தால், மூர்த்தி வந்து நிற்கிறார்.. அதை பார்த்ததும் மகன்களும் குடும்பத்தினரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.. நடுராத்திரி வந்ததால், பயந்துபோய், வீட்டிற்குள் ஓடிச்சென்றுள்ளனர்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

யாருமே மூர்த்தியின் அருகில் வரவில்லை.. இதனால் மூர்த்தி ஒன்றும் தெரியாமல் திருதிருவென விழித்துள்ளார்... அப்போதுதான் வீட்டில் தன்னுடைய போட்டோவுக்கு மாலை அணிவித்திருந்ததை பார்த்து மூர்த்தி இப்போது அதிர்ச்சியில் உறைந்தார்.. சிறிது நேரம் கழித்து ஒவ்வொருவராக மெல்ல வெளியே எட்டி பார்த்து மூர்த்தி அருகில் வந்து நின்றனர்.. வெளியூருக்கு போன இடத்தில் வேலை நிறைய இருந்ததாகவும், அதனால் உடனே வீட்டுக்கு திரும்ப முடியவில்லை என்றும் சொன்னார்.. அதற்கு பிறகுதான் குடும்பத்தினருக்கு நம்பிக்கை வந்து, நிம்மதி உணர்வும் ஏற்பட்டது.

சுடுகாடு

சுடுகாடு

பிறகு, போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று காணாமல் போன அப்பா வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டதாக சொன்னார்கள்.. இப்போது போலீசார் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.. உடனடியாக கிளம்பி வந்து, மூர்த்தியிடம் விசாரணை நடத்தினர்... இறுதியில் மூர்த்திதான் என்பது உறுதியாகிவிட்டது.. அப்படின்னா இறந்தது யாராக இருக்கும்? என்ற அடுத்த குழப்பம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.. மறுடிபயும் சுடுகாட்டுக்கு சென்று புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுக்க முடிவு செய்துள்ளனர்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+