பாம்பு.. பாம்பு.. விஜய் பேசிக்கொண்டு இருக்கும் போதே.. சட்டென இப்படி சொல்லிட்டாரே.. கவனித்த மக்கள்
ஈரோடு: ஈரோடு பெருந்துறை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் இன்று கூறிய பாம்பு கதை ஒன்று பெரிய அளவில் கவனம் பெற்றது.
ஈரோடு பெருந்துறை கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய், மஞ்சள்... பொதுவா.. நல்ல காரியம் ஆரம்பிக்கும் போது மஞ்சள் வச்சிதான் ஆரம்பிப்பாங்க.. நம்ம வீட்டில் கூட அம்மா, அக்கா, தங்கைகள், நமக்காக நாம நல்லா இருக்க்னும் என்பதுதான் மஞ்சள் கட்டித்தான் வேண்டிப்பாங்க.. மங்களகரமான மஞ்சள் விளையும் பூமிதான் ஈரோடு. அதுமட்டும் இல்லை.. இங்க ஒரு மகத்தான ஒரு மனிதர் பற்றி பேசியே ஆகணும்.. ஈரோடு மண்.. விவ்சாயத்திற்கு பெயர்போன மண்.

எனக்கு நீங்கள் மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்து இருக்கிறீங்க... நீங்க என்ன பண்ணினாலும் என்னை மக்கள் ஒருபோதும் கைவிட மாட்டாங்க.. உங்களை நம்பித்தான் நான் வந்து இருக்கேன். தவெக தொண்டர்கள் எனக்கு தைரியம் கொடுத்துள்ளனர். உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றியுடன் இருப்பேன்.
காலிங்கராயன் இங்கே கட்டிய அணையை மறக்க முடியுமா? அந்த காலத்து ஹீரோ அவர்.. அவர் இங்கே எப்படி அணை கட்டினார் தெரியுமா? இங்கே பாம்பு ஒன்று போனதாம்.. அந்த கதையை சொல்கிறேன் கேளுங்கள்.. அந்த பாம்பு சென்ற திசையில் எல்லாம் இவர் நதியின் பாதையை நிர்ணயித்து.. அணையை கட்டினார்.. அப்படி ஹீரோக்கள் வாழ்ந்த மண் இது.
ஆனால் இப்போது இதே மண் அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரிவு செய்யப்படாமல் வறட்சியில் உள்ளது. அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை விரிவு செய்ய சொன்னால் இவர்கள் அதை செய்யாமல்.. கண்காட்சி நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அண்ணாவும், எம்.ஜி.ஆரும் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை பயன்படுத்துவதை பற்றி யாரும் புகார் சொல்லக்கூடாது. நாங்கள் ஒருவழியில் அரசியல் செய்துகிட்டு போகிறோம். நீங்கள் புலம்பி தள்ளுறீங்க.. இது எப்படி இருக்கு தெரியுமா? எனக்கு பயம் இல்லை..என கத்திகிட்டே பயந்து போகும் சிறுவன் மாதிரி இருக்கு.. முதலில் மண்டை மேல இருக்க கொண்டைய மறைங்க சார்..
தயவு செய்து பெரியார் பெயரை மட்டும் சொல்லி கொள்ளையடிக்காதீங்க, களத்திலேயே இல்லாதவங்களையும் களத்திற்கும் அவுங்களுக்கும் சம்மந்தமே இல்லாதவங்களையும் எதிர்க்க போவது இல்லை. நீங்கள் கேட்குறீங்க என்பதற்காக எதிர்க்க முடியாது.. எங்களுக்கு நிறையா வேலை இருக்கு.. என்று விஜய் தனது பேச்சில் குறிப்பிட்டார்.
-
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம் -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ












Click it and Unblock the Notifications