“ரெக்கார்ட்”வைத்த ஈரோடு.. உண்மையாகவே அனல் பறக்குது! சதமடித்த வெயில் - வாக்குச்சாவடிகளில் பந்தல் ரெடி
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் ஈரோட்டில் நேற்று தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக 100 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரங்கள் நேற்று ஓய்ந்து உள்ள நிலையில், நாளை அங்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கிடையே கோடையின் தொடக்கமாக தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக நேற்று ஈரோட்டில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் பதிவானதால் வாக்குச்சாவடிகள் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது.
நாளை ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்காக அங்கு முகாமிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் அங்கு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர்.
வார்த்தை போர்கள் தொடங்கி கைகலப்புகள், மோதல்கள் என கடந்த சில நாட்களாக அனல் பறந்துகொண்டு இருந்த ஈரோடு தேர்தல் களத்தில் நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இருக்கிறது.

திருமகன் ஈவேரா
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த இவர், கடந்த ஜனவரி 4 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியை தேர்தல் ஆணையம் காலியானதாக அறிவித்து உள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டி
நாளை (பிப்ரவரி 27) இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. திமுக கூட்டணி சார்பில் இந்த தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. திருமகன் ஈவேராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவனையே காங்கிரஸ் கட்சி வேட்பாளராக அறிவித்தது.

அதிமுக வேட்பாளர்
பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் காட்டிய நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு கே.எஸ்.தென்னரசுவை வேட்பாளராக அறிவித்தது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு செந்தில் முருகனை அதிமுக வேட்பாளராக அறிவித்தது. இதனால் இரட்டை இலை சின்னமே முடங்கும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், ஓபிஎஸ் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

பிற கட்சிகள்
இதனால் தென்னரசு அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டார். தேமுதிக வேட்பாளராக ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மேனகா ஆகியோர் வேட்பாளர்களாக இந்த தேர்தலில் அறிவிக்கப்பட்டார்கள். ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 7 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.

77 பேர் போட்டி
வேட்புமனு பரிசீலனை நிறைவடைந்து 77 வேட்பாளர்களை கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் காங்கிரஸ் வேட்பாளர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.

அனல் பறந்த பிரச்சாரம்
அதேபோல் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலரும் வீடு வீடாக சென்று அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து வாக்கு சேகரித்தனர். தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் அவருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சீமான் மற்றும் அக்கட்சியின் முக்கிய பேச்சாளர்கள், இதேபோல் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா தலைமையிலான மூத்த நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

ஓய்ந்த தேர்தல் பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் கடந்த ஒரு மாதமாக அனல் பறந்துகொண்டு இருந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அரசியல் கட்சியினரால் திக்குமுக்காடிய ஈரோட்டில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது. எனவே அங்கிருந்த வெளிநபர்கள் தொகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

சதமடித்த வெயில்
அனல் பறக்கும் தேர்தல் களம் என்று சொல்வதற்கு ஏற்ப ஈரோட்டின் வானிலையும் இருந்தது. கோடை காலம் நெருங்கிவிட்ட சூழலில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக நேற்று ஈரோட்டில் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டியது. இதனால் அங்குள்ள 238 வாக்குச்சாவடி மையங்களின் வாயில்களிலும் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications