ஈரோட்டில் கனநொடியில் கண்ணாடி விரியன் செய்த வேலை.. தறிபட்டறையில் நடந்ததை பாருங்க
ஈரோடு: தமிழ்நாட்டில் நிலப்பகுதிகளில் வாழும் நான்கு விஷம்பாம்புகளான நாகப்பாம்பு, கட்டு விரியன், சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் ஆகிய நான்கு பாம்புகளே மோசமானவை.. இதில் ஒவ்வொரு பாம்பும் ஒவ்வொருவிதமாக மனிதனை பாதிக்கிறது. இதில் கண்ணாடி விரியன் பாம்பு நேரடியாக ரத்த ஓட்ட மண்டலத்தை தாக்குகிறது. இந்த பாம்பு ஆபத்தான பாம்புகளில் ஒன்றாக இருக்கிறது. ஈரோட்டில் கைகாட்டி வலசு பகுதியில் கோபால் என்பவருக்குச் சொந்தமான விசைத்தறி கூடத்தில் கண்ணாடி விரியன் புகுந்தது. அதனை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஈரோடு அடுத்த கைகாட்டி வலசு பகுதியில் கோபால் என்பவருக்குச் சொந்தமான விசைத்தறி கூடம் இயங்கி வருகிறது. இங்கு வழக்கம் போல் ஆறு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாகப் பட்டறைக்குள் பாம்பு ஒன்று புகுந்ததைக் கண்டு, அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.

விரைந்து வந்த பாம்பு பிடி வீரர்
இது குறித்து உடனடியாகப் பாம்பு பிடி வீரருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர், விசைத்தறி கூடத்தில் இருந்த அலமாரியின் அருகே பதுங்கியிருந்த பாம்பை மிகவும் லாவகமாகப் பிடித்தார். சோதனையில், அது அதிக விஷம் கொண்ட கண்ணாடி விரியன் என்பது தெரியவந்தது.
சீற்றத்துடன் இருந்த பாம்பு
பிடிபட்ட நேரத்தில் அந்தப் பாம்பு மிகுந்த சீற்றத்துடன் இருந்ததை அறிந்து, அதன் சீற்றத்தைக் குறைக்க அதன் மீது தண்ணீரை ஊற்றிய பாம்பு பிடி வீரர், பின்னர் அதனைப் பத்திரமாகச் சாக்குப் பையில் அடைத்தார். மீட்கப்பட்ட அந்தப் பாம்பு வனத்துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. கொடிய விஷம் கொண்ட கண்ணாடிவிரியன் பாம்பு விசைத்தறி கூடத்தில் புகுந்த செய்தி தொழிலாளர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் பத்திரமாக பிடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டதில் நிம்மதி அடைந்தனர்.
கிட்னி பெயிலியர்
நச்சினால் சிதைக்கப்பட்ட இரத்த அணுக்கள் மற்றும் தசையின் கழிவுகள் சிறுநீரகத்தில் தங்கி, அதைச் செயலிழக்கச் செய்கின்றன. இதுவே மரணத்திற்கு மிக முக்கியமான காரணமாகிவிடுகிறது. நச்சு ஏறியவுடன் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, இதயம் மற்றும் நுரையீரல் செயலிழந்து சில நிமிடங்களிலேயே உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. தொடர் இரத்தப்போக்கினால் உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜன் செல்லாமல் 'மல்டி ஆர்கன் ஃபெயிலியர்' ஏற்படுகிறது.
மருத்துவர்கள் தகவல்
கண்ணாடி விரியன் பாம்பு கடித்தால், கடிபட்ட 1 முதல் 2 மணி நேரத்திற்குள் Antivenom செலுத்தப்படாவிட்டால், சிறுநீரகம் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. கண்ணாடி விரியன் கடித்த இடத்தில் கடுமையான வலியும், வீக்கமும் இருக்கும். இது மற்ற பாம்புகளை விட அதிக நச்சைச் செலுத்தும் திறன் கொண்டது என்பதால் முதலுதவியை விட மருத்துவமனை சிகிச்சை முக்கியமானது என்கிறார்கள் மருத்துவர்கள். இந்தியாவில் கண்ணாடி விரியன் பாம்பு கடியால் தான் அதிகம் பேர் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனவே கவனமாக இருப்பது நல்லது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications