‛‛திருமாவளவன் பிரதமராக வாய்ப்பிருக்கிறது’’.. காங்கிரஸில் இருந்து வந்த குரல்.. அப்போ ராகுல் காந்தி?
ஈரோடு: லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் ‛இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக திருமாவளவன் வர வாய்ப்பிருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். அப்போது ராகுல் காந்தி? என கேள்வி கேட்கப்பட்டதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் அளித்த பதில் கவனம் பெற்றது.
7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 6 கட்ட லோக்சபா தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. கடைசி மற்றும் 7 வது கட்ட லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடந்து வருகிறது. 57 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

இன்று தேர்தல் முடிவடைந்த பிறகு ஜுன் 4ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என இலக்கு வைத்துள்ளது. அதேபோல் பாஜகவை வீழ்த்தி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணி திட்டமிட்டுள்ளது.
இந்த தேர்தலில் பாஜக வென்றால் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி பதவி ஏற்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை மையப்படுத்தி தான் தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியில் இன்னும் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ ஈரோட்டில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், ‛‛இந்தியா கூட்டணியை பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார். ‛இந்தியா' கூட்டணி வென்றால் 5 ஆண்டுக்கு 5 பிரதமர். ஸ்டாலினும் பிரதமராவார். ராகுல் காந்தி 5வது ஆண்டில் பிரதமராக்கப்படுவார் என கூறினார்.
இதற்கு திருமாவளவன் ‛இந்தியா' கூட்டணியில் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக இருப்பதில் தவறில்லை. அதில் தனக்கு ஆட்சேபனை இல்லை. நாங்கள் ஒற்றுமையாக செயல்படுவோம்'' என தெரிவித்தார். திருமாவளவனின் இந்த பதில் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன், ‛‛அவர் (திருமாவளவன்) சொல்வது சரிதான். திருமாவளவன் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டுள்ளார். அவர் கண்டிப்பாக ஜெயிக்க போகிறார். அவரும் பிரதமராக வர வாய்ப்பிருக்கிறது. 5 ஆண்டில் 5 பிரதமர் வந்தால் என்ன நஷ்டம் என நான் கேட்கிறேன். அதிகாரிகள் ஆண்டுக்கு ஒருமுறை மாற்றப்படுகின்றனர்.
ஆனால் பிரதமர் ஆண்டுக்கு ஒருவர் என மாற்றப்படும் நிலை வராது. வந்தாலும் கூட பிரச்சனையில்லை. 10 ஆண்டுகளாக ஒருவரே பிரதமராக (மறைமுகமாக மோடியை குறிப்பிடுகிறார்) இருந்தாலும் கூட எந்த பிரயோஜனம் எதுவும் இல்லை. மோடியால் 10 ஆண்டில் என்ன பயன் உள்ளது. அந்த வகையில் ஓராண்டு பிரதமராக இருந்தாலும் ஏதாவது செய்தால் நல்லது தான்'' என்றார்.
அதன்பிறகு, ‛‛லோக்சபா தேர்தலில் ‛இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தான் மெஜாரிட்டி தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் அதிக இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. அப்படியென்றால் ஒருமித்த குரலுடன் ராகுல் காந்தியை பிரதமராக்கும் கருத்து ஏன் வரவில்லை'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன், ‛‛ராகுல் காந்தியை பிரதமராக்கும் வாய்ப்பு ஏன் இல்லை என்று சொல்கிறீர்கள். 5 ஆண்டுக்கு முன்பே ராகுல் காந்தி தான் பிரதமராக வர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னாரே. காங்கிரஸ்காரர்களான எங்களை பொறுத்தமட்டில் ராகுல் காந்தி பிரதமராக வர வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களுக்கு உற்ற துணையாக உள்ள முக ஸ்டாலினும், ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் அது மட்டும் போதாது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சியினரும் என்ன நினைக்கிறார்கள் என்பதை பொறுத்து தான் ‛இந்தியா' கூட்டணியில் ‛யார்' பிரதமர் என்பது தெரியும்'' என்றார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications