பெண்களுக்கு ஹேப்பி.. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்! பட்ஜெட்டில் அறிவிப்பு: ஸ்டாலின் அதிரடி
மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை மார்ச் மாத பட்ஜெட்டில் அறிவிப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு: மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை யார் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். முந்தைய அதிமுக ஆட்சியில் கஜானாவை காலி செய்து விட்டு போய் விட்டனர். அதை சரி செய்த பின்னர் மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்குவோம். வரும் மார்ச் மாத பட்ஜெட்டில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியாக அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து சம்பத் நகர், பெரிய வலசு, சக்தி ரோடு, மஜித் வீதி, காந்திசிலை ஆகிய இடங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான காரணத்தை கூறினார்.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவேரா திடீரென்று அகால மரணமடைந்து விட்டார். இந்த தொகுதியில் உள்ள மக்கள் எல்லாம் வேதனையடைந்தனர். இந்த சூழ்நிலையில் இடைத்தேர்தல் நடக்கிறது.

தந்தை இழந்து அந்த இடத்தை நிரப்ப மகன் வருவார். மகன் இறந்து அந்த இடத்தை பூர்த்தி செய்ய ஈவிகேஎஸ் இளங்கோவன் வந்திருக்கிறார். மாபெரும் வெற்றியைத் தரவேண்டும்.
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகள், உறுதிமொழிகளை நிறைவேற்றி தருவோம் என்று வாக்களித்தீர்கள். திமுக ஆட்சி பொறுப்பேற்று மிகப்பெரிய சாதனைகளை செய்துள்ளது.

ஆதாரங்களுடன் திமுக செய்த சாதனைகளை பட்டியலிடுகிறேன். காலை உணவுத்திட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சில ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்தப்படுகிறது.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. கோரிக்கைகள் வைக்காமலேயே இலவச மின்சார திட்டம் அறிவிக்கப்பட்டது. திமுகவின் சாதனைப்பட்டியல் மிக நீண்டது. உலக அளவில் செஸ் வீரர்கள் பெருமைப்படும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடத்தப்பட்டது.

என் உயிரோடு கலந்தது ஈரோடு. திமுகவின் அடித்தளமே ஈரோடுதான் என்று குறிப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் உள்ள அனைவருமே முதல்வராக வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு பெற வேண்டும் என்று போராடி வருகிறோம் அதிலும் வெற்றி பெறுவோம்.
எத்தனையோ அறிவிப்புகளை நிறைவேற்றியிருக்கிறோம். கடந்த 2 ஆண்டுகால ஆட்சியில் 85 சதவிகித வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. எதிர்கட்சி தலைவருக்கு கண் தெரியாவிட்டால் நல்ல கண் டாக்டரை பார்த்து கண்ணுக்கு கண்ணாடி வாங்கிப்போட்டு பார்க்கட்டும்.
இன்னும் 3 ஆண்டு கால ஆட்சி மிச்சம் இருக்கிறது. அதற்குள் சொன்னதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம். இன்னொரு முக்கியமான வாக்குறுதி இருக்கிறது. அதை நீங்கள் மறந்தாலும் நான் மறக்கமாட்டேன். அதுதான் மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம்.
அதிமுக ஆட்சி காலத்தில் கஜாவை காலி செய்து விட்டு கடன் வைத்து விட்டு போய் விட்டார்கள். அதை படிப்படியாக சரி செய்து வருகிறோம். வரும் பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று உறுதியாக சொல்கிறேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நான் சொன்னால் அதை நிச்சயம் நிறைவேற்றுவேன்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களித்து ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
-
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
DMK - DMDK: திமுக - தேமுதிக தொகுதி பங்கீடு.. 10 இடங்கள் ஒதுக்கீடு! கூட்டணியில் 2வது பெரிய கட்சியானது -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
மாப்ள எடப்பாடி தான்.. ஆனா சட்டை அமித் ஷாவோடது! ’ஷா’ அசைவுக்கு ஆடும் பழனிசாமி! போட்டுத் தாக்கிய ஐபி!












Click it and Unblock the Notifications