செங் இஸ் கிங்.. செங்கோட்டையனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்த தவெக.. அதிர்ந்த கொங்கு மண்டலம்
ஈரோடு: அதிமுக சீனியர் நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் தவெக வில் இணைந்தார். இது தவெக வை கொங்கு மண்டலத்தில் பலப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த ஊர் திரும்பிய செங்கோட்டையனுக்கு கோவை விமான நிலையம் மற்றும் கோபிசெட்டிப்பாளையத்தில் தவெகவினர் பல மணி நேரம் காத்திருந்த பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர்.
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தலுக்காக தயாராகி வருகிறார்கள். ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுக வலுவான கூட்டணியுடன் களமிறங்கவுள்ளது. ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக - பாஜக கூட்டணி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்கள். வழக்கம் போல நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி என்று அறிவித்துள்ளனர். தவெக வும் தங்கள் தலைமையில் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

செங்கோட்டையன் தவெக
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கூட்டணியில் எப்படி வேண்டுமானாலும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், மாற்று கட்சிகளில் இருப்பது வழக்கம். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் தவெக வில் இணைந்தார். அங்கு அவருக்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கொங்கு மண்டல அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் வருகை மூலம் கொங்கு மண்டல அரசியலில் ஆழமாக கால் பதிக்கலாம் என்பது தவெக வின் நம்பிக்கையாகும். தவெக வில் கள அரசியல் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் மிகவும் குறைவாக உள்ள நிலையில், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி இணைந்திருப்பது அவர்களின் கள அரசியலை பட்டை தீட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி
முக்கியமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற நவம்பர் 30 ஆம் தேதி செங்கோட்டையனின் சொந்த ஊரான கோபிசெட்டிப்பாளையம் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார். உண்மையான அதிமுக ஆதரவு தன் பக்கம் இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி பொதுக் கூட்டம் நடத்தி உரையாட திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கு முன்னதாக தன்னுடைய செல்வாக்கை நிரூபிக்க செங்கோட்டையன் திட்டமிட்டார். இந்நிலையில் த வெக வில் இணைந்த பிறகு செங்கோட்டையன் முதல்முறையாக சென்னையில் இருந்து இன்று தன் சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் திரும்பியுள்ளார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமானநிலையம் வந்து அங்கிருந்து கோபிசெட்டிப்பாளையம் செல்வது தான் திட்டம்.
பிரம்மாண்ட வரவேற்பு
அங்கு உற்சாக வரவேற்பு கொடுக்க தவெக நிர்வாகிகள் நண்பகல் 12 மணியளவில் விமான நிலையத்தில் திரண்டுவிட்டனர். ஆனால் மோசமான வானிலை காரணமாக விமானம் குறித்த நேரத்தில் தரையிறங்காமல் பெங்களூர் திருப்பிவிடப்பட்டது. மதியம் 1.40 மணியளவில் கோவை வரவேண்டிய விமானம் மாலை 4 மணிக்கு தான் கோவை விமான நிலையம் வந்தது.
சுமார் 4 மணி நேரம் தாமதம் ஏற்பட்டாலும் செங்கோட்டையனை வரவேற்க திரண்ட ஆயிரக்கணக்கான தவெக வினர், கலைந்து செல்லாமல் காத்திருந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். செங்கோட்டையனுக்கு முன்பு அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான பொள்ளாச்சி ஜெயராமன் கோவை விமான நிலையம் வந்தார். அங்கு திரண்டிருந்த தவெகவினர், "சார் நீங்களும் தவெக வந்துவிடுங்கள்." என்று தவெகவினர் கமென்ட் அடித்தனர்.
செங் இஸ் கிங்
விமானம் தாமதம் காரணமாக செங்கோட்டையன் கோபிசெட்டிப்பாளையம் செல்லும் நேரத்திலும் தாமதம் ஏற்பட்டது. செங்கோட்டையன் கோபிச்செட்டிப்பாளையம் செல்வதற்குள் மாலை 7.15 மணி ஆகிவிட்டது. அங்கும் பல மணி நேரம் காத்திருந்து, பல ஆயிரக்கணக்கான தவெக வினர் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்தனர். தவெக வினர் 'TVK.. TVK' என்று கோஷமிட்டனர். தன் சொந்த மண்ணில் தான் எப்போதுமே மாஸ் என்று எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் நேரடியாக சவால் விடும் வகையில் வரவேற்பு நிகழ்வு அமைந்துள்ளது.
-
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு -
தவெக வேட்பாளர்களை அறிவித்த சில நிமிடங்களில் விஜய்க்கு அதிர்ச்சி.. பறக்கும் படை அதிகாரிகள் ரெய்டு -
விஜய் பெயரளவில் தான் கிறிஸ்தவர்.. சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாதவர்.. அருட்தந்தை விமர்சனம்! -
பெரம்பூர் தொகுதியில் விஜய்யை எதிர்க்கும் திலகபாமா? அன்புமணி முடிவுக்கு பின் என்ன காரணம்? -
திமுகனாலும்.. தவெகனாலும்.. சீட்டுகளை அள்ளும் மாஜி அதிமுக தலைகள்! விஜய் லிஸ்ட்டில் யார் யார் பாருங்க! -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
ஆதவ் ஆர்ஜுனாவின் மாஸ்டர் பிளான்.. வில்லிவாக்கத்தை குறிவைத்தது ஏன்? திமுக அதிமுகவுடன் நேரடி போட்டி -
ஜோதிடம் மூலம் புற்றுநோய் குணமா.. கோவை தவெக பெண் வேட்பாளரின் சர்ச்சை பின்னணி -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications