பெரியார் சொந்த மண்ணில் அவலம்.. கொள்கை தலைவருக்கே தடை போடும் தவெக.. விஜய்க்கு தெரியுமா

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தவெக ஆட்சிக்கு வந்து 5 மாதங்கள் ஆகப்போகிறது. பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். தவெக அறிவித்த கொள்கைக்கும், அவர்களின் செயல்பாட்டிலும் மாறுபாடு உள்ளது. தவெகவின் கொள்கை தலைவர்களில் ஒருவராக பெரியார் அறிவிக்கப்பட்டார். அவரின் சொந்த ஊரான ஈரோட்டில், பெரியார் பிறந்தநாளுக்கு காலம் காலமாக நடந்த ஊர்வலத்துக்கு, இந்தாண்டு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இது பெரியார் இயக்கங்களிடையே அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதி, அவரின் சொந்த ஊரான ஈரோட்டில் கொண்டாட்டம் இருக்கும். திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் இணைந்து, பன்னீர்செல்வம் பூங்காவில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, இல்லத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதும் வழக்கம். அப்போது பேரணியாக செல்வார்கள். பெரியாரின் கொள்கைகளை மக்களிடம் சேர்ப்பதற்காக பதாகை ஏந்தி ஊர்வலம் மேற்கொள்ளப்படும்.

tvk-government-refused-permission-for-periyar-birthday-rally-in-erode

காவல்துறை அனுமதி மறுப்பு

இந்தாண்டு பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு பேரணி செல்ல, திராவிடர் கழகம் சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. அதற்கு ஈரோடு காவல்துறை அனுமதி மறுத்துள்ளனர். திராவிடர் கழகம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "செப்டம்பர் 17 தந்தை பெரியாரின் பிறந்தநாள். வழக்கமாக ஊர்வலம் சென்று திருவிழாவாக கொண்டாடுவோம். இதற்கு காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது.

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கொடுத்திருப்பதால், உங்களுக்கு அனுமதி வழங்க முடியாது. நீங்கள் வேண்டுமானால் உயரதிகாரிகளிடம் பேசிக்கொள்ளுங்கள் என்று துணை ஆய்வாளர் கூறுகிறார். எங்களுக்கு மனவேதனையாக உள்ளது. எந்த ஆட்சி வந்தாலும் இதற்கு தடை ஏற்பட்டதில்லை. இது எங்கள் உணர்வோடு, உயிரோடு கலந்துள்ளது. நிச்சயமாக அனுமதி மறுக்க கூடாது. நாங்கள் ஊர்வலம் நடத்துவோம். வேண்டுமானால் சவ ஊர்வலம் நடத்துவோம் என்று கூறினோம்.

கொந்தளிக்கும் உணர்வாளர்கள்

அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. உயரதிகாரிகளிடம் பேசச் சொல்கிறார்கள். இப்போது வரை அனுமதி மறுப்பு தொடர்கிறது. ஒரு கிமீ தொலைவுக்கு தான் அனுமதி கேட்டுள்ளோம். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மாலை தான் நடக்கும். எங்கள் ஊர்வலம் காலை தான் நடக்கும். மணிக்கூண்டு, நேதாஜி சாலை, பெரியார் வீதி வழியாக செல்ல திட்டமிட்டோம். இன்றைக்கு அதற்கு அனுமதி மறுப்பது வேதனையளிக்கிறது.

விநாயகர் சதுர்த்தியால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்றனர். எங்களுக்கு பாதுகாப்பே வேண்டாம் என்று சொல்லியும் கேட்கவில்லை. பெரியாரை பின்பற்றுகிற பல்வேறு அமைப்புகள் எங்களுடன் இணைந்த ஊர்வலம் மேற்கொள்ள திட்டமிட்டோம். காவல்துறை ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும். எங்களின் கழக தலைவரிடம் சொல்லி, அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+