செங்கோட்டையன் பேட்டி கொடுத்த போது.. விசில் அடித்து இடையூறு செய்த தவெக! டென்ஷனாகி அவரே சொன்ன கமெண்ட்
ஈரோடு: தவெக நிர்வாகி செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பின் போது விசில் அடித்து இடையூறு செய்த தவெகவினரை ஒன்றும் செய்ய முடியாது என்று கமெண்ட் செய்த வீடியோ டிரெண்டாகி வருகிறது. விசில் அடிப்பவர்கள் நிறுத்த மாட்டார்கள் என்று கூறிய செங்கோட்டையன், நாம் பேசத் தொடங்குவோம் என்று கூறினார்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிட்ட சூழலில், தவெக தரப்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கி இருக்கிறது. இந்த முறையும் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட செங்கோட்டையன் விருப்ப மனு கொடுத்திருக்கிறார். அதேபோல் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருக்கிறது.

இதனால் தவெகவினர் எங்கு சென்றாலும் விசில் ஊதிக் கொண்டே இருப்பதாக தெரிய வந்துள்ளது. தவெகவின் சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கு பதிலாக, விசில் மட்டும் ஊதிக் கொண்டே இருப்பது சாமானிய மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் விசில் சின்னம் அறிவித்த பின், தவெக நிர்வாகி செங்கோட்டையன் தொண்டர்கள் எச்சரித்திருந்தார்.
தூங்குவோர் மத்தியில் விசில் அடித்துவிடாதீர்கள், பேருந்தில் இருக்கும் போது விசில் அடித்துவிடாதீர்கள் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தவெகவின் 3வது ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. இதில் தவெக நிர்வாகி செங்கோட்டையன், சத்தியபாபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்திக்க வந்தார்.
அப்போது அங்கிருந்த தவெகவினர் விசில் ஊதிக் கொண்டே இருந்தனர். ஒரு கட்டத்தில் அங்கிருந்த நிர்வாகிகள் சொல்லியும் விசில் ஊதுவதை யாரும் நிறுத்தவில்லை. அப்போது செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.. விசில் அடிப்பவர்கள் நிறுத்த மாட்டார்கள்.. நாம் தொடங்கலாம் என்று கூறினார்.
இதன்பின் செய்தியாளர்களிடம் செங்கோட்டையன் பேசுகையில், தவெக நிகழ்ச்சி எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2026 என்பது தவெகவின் தலைவர் விஜய் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. மக்கள் வேலைவாய்ப்பு இன்றி தொழில் முடங்கி போயிருக்கும் நிலை உள்ளது.
100 நாள் வேலைத் திட்டத்தை என்பது இரு அரசுகளாலும் நடத்த முடியாமல் உள்ளது. கிராமப்புற மக்களின் கண்ணீரை துடைப்பதற்கும், சிறந்த கல்வியை மாணவர்களுக்கு கொடுக்கவும், விஜய் ஆட்சி அமைய வேண்டும். தமிழ்நாட்டில் எத்தனையோ போராட்டம் நடந்து வருகிறது. திமுக, அதிமுக இணைந்து நின்றாலும், தவெகவின் வெற்றியை தடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
-
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது தவாக.. கூடுதல் சீட் தராததால் வேல்முருகன் அதிரடி முடிவு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
வேல்முருகன் குறிவைக்கும் 'அந்த' 3 தொகுதிகள்! பாமக கோட்டையைக் கைப்பற்றத் துடிக்கும் தவாக! -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
தனி விமானத்தில் மும்பை புறப்பட்டார் விஜய்.. தேர்தல் பணிகளுக்கு இடையே திடீர் பயணம் -
NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
வேலூர் பெண் போஸ்ட் மாஸ்டருக்கு ஆபாச செய்கை காட்டிய தவெக புள்ளி.. இந்த நபரா? அதிர்ச்சி பின்னணி என்ன -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ












Click it and Unblock the Notifications