Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல் பாலே சிக்ஸர் விளாசிய செங்கோட்டையன்.. தவெகவில் இணைந்த பிரபல நடிகர்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிகட்டத்தில் உள்ளன. தேர்தல் என்றால் அரசியல் தலைவர்கள் கட்சி மாறுவது இயல்பு தான். இந்நிலையில் செங்கோட்டையன் முயற்சியில் பிரபல நடிகர் ஜீவா ரவி தவெகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இன்று செங்கோட்டையனை சந்தித்த ஜீவா ரவி, எனக்கு விஜய் சாரை ரொம்ப பிடிக்கும். செங்கோட்டையன் எங்களின் காட்பாதர் போல. அவர் செல்லும் பாதையில் நாங்களும் சென்று மக்களுக்கு நல்லது செய்வோம். என்று கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் தவெகவில் இணைந்தார். அதில் கட்சி தலைமை குழு ஒருங்கிணைப்பாளர், கொங்கு மண்டல அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தவெகவில் இணைந்த செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். அதிமுகவில் உள்ள பல முக்கிய புள்ளிகளை கட்சியில் இழுக்கும் அஸைன்மென்டுடன் அவர் களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

TVK Jeeva Ravi

தவெகவில் ஜீவா ரவி

இந்நிலையில் செங்கோட்டையனை பிரபல நடிகர் ஜீவா ரவி, "ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள அவரின் அலுவலகத்தில் இன்று சந்தித்து பேசினார். அப்போது ஜீவா ரவி தவெகவில் இணைந்துள்ளதாக செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். தவெகவில் இணைந்த குறுகிய காலத்திலேயே அவர் பிரபல நடிகரை இணைத்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜீவா ரவி செய்தியாளர்களிடம் கூறுகையில், இது எங்கள் ஊர். செங்கோட்டையன் எங்களுக்கு நிறைய செய்துள்ளார். நான் இப்போது உயிரோடு இருக்கிறேன் என்றால் அதற்கு அவர்தான் காரணம். அவரை பார்த்து வாழ்த்து சொல்ல வந்தேன். இது மரியாதை நிமத்தமான சந்திப்பு நல்ல விஷயத்தில் இறங்கியுள்ளார். எங்கள் திரையுலகத்தைச் சேர்ந்த விஜய்யுடன் சேர்ந்துள்ளார். நானும் சேரலாம். அது அடுத்த மாதம் தெரியும். எல்லாம் தலைவரின் ஆசிர்வாதம். விஜய் சாருடன் நட்பு எப்போதும் தொடரும்.

செங்கோட்டையன் பாதையில்

இதில் நல்லது செய்ய வேண்டும் என்றால் நானும் அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கறேன். அது நாளை கூட நடக்கலாம். இன்று மாலை கூட நடக்கலாம். நல்லது செய்ய நேரம், காலம் எதுவும் இல்லை. செங்கோட்டையன் எங்களின் காட்பாதர் போல. அவர் செல்லும் பாதையில் நாங்களும் சென்று மக்களுக்கு நல்லது செய்வோம். அவர் தவெகவில் சேர்ந்தது எங்கள் அப்பா சேர்ந்தது போல பார்க்கிறேன்.

விஜய் சார் எனக்கு பிடிக்கும். அவரின் பேச்சு, துணிவு, மக்கள் மீதான அக்கறை எல்லாம் பிடிக்கும். அவர் மக்களுக்கு எதாவது செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வுடன் இருப்பவர். அமைதிக்கு எப்போதுமே ஒரு சக்தி உள்ளது. சென்னையில் இணைவதைவிட, நம் ஊரில் செங்கோட்டையன் முன்பு இணைவது தான் மகிழ்ச்சி. அதனால் தவெகவில் இணைய மனபூர்வமாக முடிவு செய்துள்ளேன். இது எங்கள் தாத்தா ஊர். இங்கு இணைவது தான் எனக்கு மகிழ்ச்சி. நல்ல மனிதருக்கு நல்லது நடக்கும்.

விஜய் உள்ளுணர்வு

முன்பு இவ்வளவு கூட்டம் இல்லை. தற்போது செங்கோட்டையன் விமான நிலையம் வந்தபோது அதிக கூட்டம் கூடியது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. சீமான் சார் வேறு. விஜய் சார் வேறு. இருவரும் கட்சி தொடங்கியுள்ளனர். விஜய் சார் உள்ளுணர்வு இருப்பதுடன், அதை செய்ய கூடியவர். அந்த நம்பிக்கை இருக்கிறது. சீமான் சாருடன் நான் பழகியதில்லை. அரசியல் பெரிய களம். இதில் அவர் வலுவாக நிற்பது பெரிய விஷயம். நல்லது யார் செய்தாலும் அங்கு நாங்கள் உழைப்பேன்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+