விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. IRS பதவியை தூக்கி எறிந்துவிட்டேன்.. அருண்ராஜ் ஆவேசம்!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தவெக தலைவர் விஜய்க்கு பணம், பெயர், புகழை கொடுத்த மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் விஜய் அரசியலுக்கு வந்துள்ளதாக அக்கட்சியின் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாக கூறிய அருண்ராஜ், தமிழக மகளிர் திமுகவை நம்ப மாட்டார்கள் என்றும் விமர்சித்துள்ளார். அதேபோல் விஜய்யின் வார்த்தைக்காக மட்டுமே IRS பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்ததாகவும் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் தவெகவின் பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பின் நடக்கும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பேசுகையில், தவெக தலைவர் விஜய் காவிரி ஆறு போல்தான். அனைவருக்கும் பொதுவானவர்.

TVK Vijay

நல்லது மட்டுமே செய்ய நினைக்கும் ஒரே தலைவர். அனைத்து சாதியினருக்கும், மதத்தினருக்கும் பொதுவானவர். விஜய்யுடன் நெருங்கி பழகியவன் என்ற முறையில் சொல்லிக் கொள்கிறேன். விஜய்யிடம் இல்லாத பணமா, புகழா, பெயரா.. வாழ்வில் விஜய்க்கு தேவையான அத்தனையையும் கொடுத்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றே விஜய் அரசியலுக்கு வந்துள்ளார்.

அந்த நம்பிக்கை ஆழமாக இருந்ததால் தான், விஜய் சொன்ன ஒரு வார்த்தைக்காக நான் படித்து பெற்ற ஐஆர்எஸ் பதவியை தூக்கி எறிந்துவிட்டு அரசியலுக்கு வந்துள்ளார். தவெகவை பார்த்து ரசிகர்கள் கூட்டம் என்கின்றனர். செங்கோட்டையன் கூட ஒரு காலத்தில் எம்ஜிஆர் ரசிகர் தான். அப்படியான நிலையில் இருந்து, தமிழ்நாடு முழுவதும் மதிக்கக் கூடிய தலைவராக மாறி இருக்கிறார்.

அதுபோல் தவெகவில் இருந்தும் ஏராளமான செங்கோட்டையன்கள் வருவார்கள். அதேபோல் ரசிகர்கள் கூட்டமாக இருப்பதில் எந்த தவறும் இல்லை.. ஆனல் திமுகவை போல் கொள்ளையடிக்கும் கூட்டமாக இருக்கக் கூடாது. அதேபோல் மத்திய அரசு 100 நாள் வேலை திட்டத்தில் இருந்து மகாத்மா காந்தியின் பெயரை நீக்க உள்ளது. இதன் மூலமாக மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+