உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும்! ஆவலோடு விருப்பம் தெரிவிக்கும் அமைச்சர் முத்துசாமி!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என அமைச்சர் முத்துசாமி ஆவலோடு தனது விருப்பத்தை பகிர்ந்துள்ளார்.

உதயநிதி அமைச்சராக வேண்டும் என்பது தனது ஆசை மட்டுமல்ல அனைவரது விருப்பமும் அதுவே என அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வேண்டும் எனப் பேசி கவனம் ஈர்த்திருக்கிறார்.

தமிழக அமைச்சரவை

தமிழக அமைச்சரவை

தமிழக அமைச்சரவை பொங்கலுக்கு பிறகு மாற்றியமைக்கப்படும் என ஆருடங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்ற குரல்கள் திமுகவில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன. அண்மையில் அவரது 45வது பிறந்தநாள் விழாவில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்பட்டால் அவரிடம் உள்ள திறமை ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பயன் தரும் வகையில் இருக்கும் எனக் கூறியிருந்தார்.

அமைச்சர் முத்துசாமி

அமைச்சர் முத்துசாமி

மேலும், உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேசி வருகிறார். இந்நிலையில் சீனியர் அமைச்சரான முத்துசாமியும் அன்பில் மகேஷ் கோரிக்கையை வழிமொழிந்துள்ளார். இதன் மூலம் உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் நாளுக்கு நாள் திமுகவில் வலுவடைந்து வருவது தெரிய வருகிறது. உதயநிதிக்கு கட்சிக்காரர்கள் ஆதரவு மட்டுமின்றி மக்களின் அன்பும் ஆதரவும் உள்ளதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

ஈரோட்டில் புதிய வணிக வளாகத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். இதேபோல் அமைச்சர் சிவசங்கரும் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தார். அமைச்சர்கள் வரிசையாக உதயநிதிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருவதை வைத்து பார்த்தால் அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் கட்டாயம் இடம் பிடித்துவிடுவார் போல் தெரிகிறது.

முதல்வர் என்ன முடிவு?

முதல்வர் என்ன முடிவு?

இந்த விவகாரத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது தான் கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரை பொறுத்தவரை எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் அலசி ஆராய்ந்து தான் எடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+