த்ரிஷா விவகாரம்.. பாஜகலாம் ஒரு கட்சியா.. நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா.. செங்கோட்டையன் பதிலடி!
ஈரோடு: தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சிற்கு தவெக சீனியர் நிர்வாகியான செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். பாஜகலாம் ஒரு கட்சியா என்று கேள்வி எழுப்பிய செங்கோட்டையன், நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா என்றும் விமர்சித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய 3 கட்சிகளையும் காட்டமாக விமர்சித்தார். பாஜகவின் தமிழிசை செளந்தரராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன் தொடர்ச்சியாக விஜய்யை தங்களின் கூட்டணிக்கு அழைத்து வருகின்றனர். ஆனால் விஜய்யோ தொடர்ந்து பாஜகவை அட்டாக் செய்து வருகிறார்.

நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து நயினார் நாகேந்திரன் பேசுகையில், பாவம் விஜய்க்கு எதுவுமே தெரியாது.. அனுபவமே இல்லாதவர்.. விஜய் முதலில் வீட்டில் இருந்து வெளியில் வர வேண்டும்.. த்ரிஷா கிட்ட இருந்து வெளியில் வந்தால் தான் எல்லாமே நடக்கும்.. குடும்பத்துடன் நல் உறவு வைக்க வேண்டும் என்று கூறினார்.
திமுக எம்பி கண்டனம்
விஜய்யின் சொந்த வாழ்க்கை குறித்தும், நடிகை த்ரிஷா குறித்தும் நயினார் நாகேந்திரன் பேசி இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இதற்கு திமுக எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், கனிமொழி என்வி சோமு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால் நடிகை த்ரிஷா குறித்து தவறாக பேசிய நயினார் நாகேந்திரன் தொடர்பாக எதுவும் பேசாமல் பாஜகவில் இருக்கும் குஷ்பு, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அமைதி காக்கின்றனர்.
நாஞ்சில் சம்பத் பதிலடி
இதற்கு தவெக நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே நாஞ்சில் சம்பத், ரூ.4 கோடி சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. முதலில் உங்கள் முதுகில் படிந்திருக்கும் கறைகளை கங்கை நீரால் கழுவுங்கள்.. விஜய் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களை கூசச் செய்கிறது.
செங்கோட்டையன் பதிலடி
பொறாமை தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள்.. வரம்பு மீறி விமர்சித்தால் தமிழக பெண்கள் கொடுக்கும் பதிலடிக்கு உங்கள் பதில் சொல்ல முடியாது என்று தெரிவித்திருந்தார். தற்போது தவெகவின் முக்கிய நிர்வாகியான செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
நயினார் நாகேந்திரன் ஒரு ஆளா
அதற்கு செங்கோட்டையன், பாஜகலாம் ஒரு கட்சியா.. நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா.. என்று பதில் அளித்தார். செங்கோட்டையனின் இந்த பேட்டி தவெகவினரால் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் மோதல் இருந்து வந்த சூழலில், தற்போது செங்கோட்டையன், நயினார் நாகேந்திரன் எல்லாம் ஒரு ஆளா என்று பேசி மோதலை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications