சாணி உருண்டைகள் வீசி அடிக்கும் வினோத கோயில் திருவிழா.. தமிழ்நாட்டில் இப்படியொரு கிராமமா?

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள கிராமத்தில் ஒருவர் மீது ஒருவர் மாட்டு சாணி உருண்டைகளை வீசும் விநோத திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது. இந்த சாணியடி திருவிழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு உற்சாகமாக சாணி அடித்து கொண்டனர். இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள கும்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பீரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை முடிந்த 3வது நாள் சாணியடிக்கும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று காலை 10 மணி பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருவிழா தொடங்கியது.

Cow Dung Temple Thiruvizha

இதற்காக கிராமத்தில் உள்ள பசுமாடுகளின் சாணம் சேகரிக்கப்பட்டு கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து அருகிலுள்ள குளத்தில் இருந்து தாரை, தப்பட்டை முழங்க சாமி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது புல்லால் மீசை அமைத்து அலங்கரிக்கப்பட்ட ஒருவர் கழுதை மீது அமர வைத்து, ஆடிப்பாடி ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வரப்பட்டார்.

பின்னர் பீரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சாணியடி விளையாட்டு தொடங்கியது. கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டிருந்த மாட்டு சாணத்தை இளைஞர்கள் உருண்டைகளாக உருட்டி, ஒருவர் மீது வீசி அடித்து விளையாடினர்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெற்றுடம்புடன் உற்சாகமாக சாணி உருண்டைகளை வீசி கொண்டாடினர். சுமார் 2 மணி நேரம் வரை இந்த விநோத விளையாட்டு நடைபெற்றது. வெளிநாட்டினர் சிலரும் இந்த வித்தியாசமான திருவிழாவை பார்வையிட்டனர். பின்னர் அனைவரும் அருகிலுள்ள குளத்தில் நீராடிவிட்டு கோயிலுக்கு சென்று பீரேஸ்வரரை வழிபட்டனர்.

Cow Dung Temple Thiruvizha

இதுகுறித்து கிராம மக்கள் பேசுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் வசித்த பெரியவர் ஒருவர் தானியங்களை கொட்டி வைத்திருந்தார். அவர் இறந்த பிறகு, அந்த இடத்தில் ஊர் மக்கள் சாணத்தை கொட்டி குப்பை மேடாக மாற்றினர். ஒருநாள் அந்த குப்பை மேட்டை விவசாய நிலத்துக்கு எடுத்துச் செல்ல மண்வெட்டியால் வெட்டியபோது, அதன் உள்ளே சிவலிங்கம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து கிராம மக்கள் ஆச்சரியமடைந்து, ஊரின்நடுவே கோயில் கட்டி சிவலிங்கத்தை வைத்து வழிபடத் தொடங்கினர். சாணம் கொட்டப்பட்ட இடத்தில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதை நினைவுகூறும் வகையில், தீபாவளி முடிந்த 3வது நாள் சாணியடிக்கும் திருவிழாவை நடத்தி வருகிறோம். விழா முடிந்ததும் சாணத்தை விவசாய நிலங்களில் பயன்படுத்தினால் விளைச்சல் செழிக்கும் என்பது எங்கள் நம்பிக்கை என்று தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+