ஈரோடு அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அடிதடி.. களேபரமான கட்சி மீட்டிங்.. பரிதவித்து நின்ற செங்கோட்டையன்
ஈரோடு: அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (அதிமுக) கட்சியின் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தின் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திடீரென மோதல் ஏற்பட்டது. இதனால் செய்வதறியாது பரிதவித்து போனார் செங்கோட்டையன். மீட்டிங் தொடங்கிய கொஞ்ச நேரத்தில் அந்த இடமே களேபரம் ஆனது.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்..
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தின் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடந்தது. இதில் நிர்வாகிகள் பலரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அப்போது அதிமுகவின் அந்தியூர் ஒன்றியச் செயலாளரான பிரவீன், தொண்டர்களுக்கு மரியாதை இல்லை என்றும், கட்சி நிர்வாகிகள் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் பேசினார்.

அப்போது ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த போது, பொங்கி எழுந்த எதிர்தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் மாறி மாறி கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் ஆவேசமாக பேசிய அந்தியூர் ஒன்றியச் செயலாளரான பிரவீன் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை பார்த்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்வதறியாது சில நிமிடங்கள் திகைத்து போனார். ஒரு சில நிமிடங்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியது.
இதனிடையே அங்கு நடந்த சம்பவம் குறித்து பேட்டி அளித்த அந்தியூர் ஒன்றியச் செயலாளரான பிரவீன், அதிமுக தொண்டர்களுக்கு மரியாதையே இல்லை என்று குற்றம்சாட்டினார்.. கட்சி அழிந்து வருவதாகவும், தொண்டர்களை நிர்வாகிகள் சுத்தமாக மதிப்பது இல்லை என்றும் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த அதிமுக நிர்வாகி பேட்டி எடுக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.. தொடர்ந்து பேட்டி அளிக்க முயன்ற பிரவீன் என்பவரை அங்கிருந்த அதிமுக நிர்வாகிகள், தடுத்து நிறுத்தி அழைத்து சென்றனர். என்ன நடந்தது.. எதனால் இந்த சண்டை என்பது குறித்து தெளிவான தகவல்கள்.. இதனிடையே இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications