ஈரோடு அந்தியூர் டாஸ்மாக் பாரின் பின்னால் நின்ற கார்.. உள்ளே திறந்து பார்த்து.. ஆடிப்போன போலீஸ்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி கைகாட்டி பிரிவில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை பாரில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாரின் பின்புறம் நின்றிருந்த கார் மற்றும் ஸ்கூட்டரில் ஏராளமான மதுபாட்டில்கள் இருந்தது. இந்நிலையில் மதுபாட்டில்கள் கடத்திய டாஸ்மாக் பார் ஊழியர் கையும் களவுமாக கைது செய்தனர்.
டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி, வெளியில் அதிக விலைக்கு விற்பது அவ்வப்போது சில பகுதிகளில் நடக்கிறது. டாஸ்மாக் கடைகளில் விற்கும் விலையவிட 50 முதல் 100 ரூபாய் அதிகம் வைத்து, டாஸ்மாக் திறக்காத நேரங்களில் சிலர் விற்பனை செய்கிறார்கள்.

சில டாஸ்மாக் பார்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வாங்கி வைத்து அதிக விலைக்கு விற்கிறார்கள். சில டாஸ்மாக் கடைகளில் முக்கியமான சில பீர் வகைகள் இருப்பது. அதேநேரம் அங்குள்ள பார்களில் கூடுதலாக 20 ரூபாய் வைத்து கூலிங்காக விற்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அதேபோல் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக விற்பதாகவும் பல இடங்களில் புகார்கள் உள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் டாஸ்மாக் பாரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
ஈரோடு மாவட்டம் கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி கைகாட்டி பிரிவில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை பாரில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பாரின் பின்புறம் நின்றிருந்த கார் மற்றும் ஸ்கூட்டரை சோதனை செய்தனர். 2 வாகனங்களிலும் 838 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அங்கிருந்த 3 பேரை பிடிக்க முயன்றனர். அப்போது 2 பேர் தப்பி ஓடிவிட்டார்கள். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிடிபட்டவர், சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் உருவாடி பகுதியை சேர்ந்த டாஸ்மாக் பார் ஊழியரான சிவக்குமார் (வயது 45) என்பதும், 3 பேரும் சேர்ந்து கோபி பகுதியில் உள்ள மதுக்கடையில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி அந்த பகுதியில் கூடுதல் விலைக்கு விற்க இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதுகுறித்து கோபி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 838 மதுபாட்டில்கள், ரூ.95 ஆயிரம், மதுபாட்டில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் ஸ்கூட்டர் ஆகியவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் வெள்ளகுழி பகுதியை சேர்ந்த சிலம்பரசன், மதுரை மாவட்டத்தை சேர்ந்த மோசஸ் என்கிற மோகன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
-
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications