யார் இந்த சீதாலட்சுமி? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாதக வேட்பாளர்! சொத்து மதிப்பு சுமார் 1 கோடி!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன்படி நாதக சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுகிறார். சீதாலட்சுமி, ஆசிரியராகப் பணியாற்றியவர். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 1 கோடி.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடக்கிறது. அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், திமுக சார்பில் வி.சி. சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
நாதக வேட்பாளர்
இந்நிலையில், சீமான், இன்று தமது கட்சியின் வேட்பாளரை அறிவித்துள்ளார். நாதக சார்பில் சீதாலட்சுமி போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவர் முதுகலை ஆய்வியல் நிறைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக மா.கி.சீதாலட்சுமிக்கு 49 வயது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில் திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டார். அப்போது அவர் வேட்பு மனுவில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தின்படி, 99 லட்சங்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மீது 2 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
திருப்பூரில் போட்டியிட்டவர்
திருப்பூர் எம்.பி தொகுதியில் போட்டியிட்ட சீதாலட்சுமி, 95,726 வாக்குகள் பெற்று நான்காம் இடம் பிடித்தார். இந்நிலையில், தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் தற்போது இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் சீதாலட்சுமி.
நாதக வேட்பாளர் பயோ டேட்டா
பெயர்: மா.கி. சீதாலட்சுமி
கணவர் பெயர்: இரா. செழியன், M.E.
தந்தை பெயர்: ம.கிருஷ்ணன், B.Sc.,
தாயார் பெயர்: காந்திமதி
ஊர்: மாரப்பம்பாளையம்.
பிறந்த தேதி: 20.03.1975.
படிப்பு: முதுகலை ஆய்வியல் நிறைஞர், M.A, M.pil.,
சமூகம் : கொங்கு வேளாளர் இளங்கலை பொருளாதாரம் . கோபி கலைக் கல்லூரி. முதுகலை ஆய்வியல் பாரதியார் பல்கலைக் கழகம். கோவை.
பணி : 13 ஆண்டுகள் ஆசிரியப் பணி. (2000- 2013)
தற்போதைய பணி : கேபிள் ஆபரேட்டர், விவசாயம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications