ஸ்டாலின் போட்ட உத்தரவு.. நைட்டுனு கூட பார்க்கலையே.. வெளுத்து வாங்கிய திமுக! காங்கிரஸே மிரண்டுடுச்சே
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை திமுக மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு உள்ளது. காங்கிரஸே மிரண்டு போகும் அளவிற்கு அங்கு சில பணிகளை திமுக செய்து வருகிறதாம்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இந்த தேர்தலுக்காக திமுக தரப்பு மிக கடினமாக உழைத்து வருகிறதாம்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் பிப்ரவரி 27ம் தேதி இங்கே இடைத்தேர்தல் நடக்க உள்ளது. மார்ச் 3ம் தேதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் கடந்த ஜனவரி 4ம் தேதி மரணம் அடைந்ததார்.

வேட்பாளர்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தற்போது காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நிற்க வைக்கப்பட்டு உள்ளார். முதலில் ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் சார்பாக சம்பத் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அதன்பின் வேறு தலைவர்களை காங்கிரஸ் ஆலோசனை செய்வதாக கூறப்பட்டது. ஆனால் கடைசியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் இங்கே போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இவரின் தேர்விலேயே திமுகவின் பங்கு அதிகம் இருப்பதாக கூறப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் சொல்லித்தான் ஈவிகேஎஸ் இளங்கோவன் நிற்க வைக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதெல்லாம் உறுதி செய்யப்படவில்லை.

ஸ்டாலின்
ஈவிகேஎஸ் இளங்கோவன் நின்றால் அனுதாப வாக்குகள் கண்டிப்பாக கிடைக்கும். அதேபோல் அவர் சீனியர் தலைவர். கண்டிப்பாக அவருக்கு சப்போர்ட்டான வாக்குகள் அதிகம் கிடைக்கும். அதனால் அவரை நிறுத்த வேண்டும் என்று திமுக தரப்பு காங்கிரஸ் தலைமைக்கு மெசேஜ் அனுப்பிய நிலையிலேயே இளங்கோவன் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கோஷ்டி தகராறு அதிகம் உள்ள காங்கிரசில் இந்த தேர்தலும் கோஷ்டி தகராறை ஏற்படுத்தி உள்ளது. இளங்கோவனுக்கு எதிராக மாவட்டத்திலேயே சில காங்கிரஸ் புள்ளிகள் வேலை பார்ப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் இளங்கோவனுக்கும் மாநில தலைவர் அழகிரிக்கு உறவு சரியில்லை என்று கூறப்படுகிறது.

மோதல்
கடந்த நவம்பரில் காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் ரூபி மனோகரன் ஆட்களுக்கும், கே.எஸ் அழகிரி ஆட்களுக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. கே.எஸ் அழகிரியை மறித்து ரூபி மனோகரன் ஆட்கள் சில கேள்விகளை கேட்க முயன்ற நிலையில் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் பதவிக்கான ஆயுட்காலம் முடிந்து 1 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையிலும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. கே.எஸ் அழகிரி தலைவர் பதவியில் நீடிப்பதற்கான திட்டங்களை போட்டு வருகிறார். இது பற்றி விசாரிப்பதற்காக நடந்த விவாதத்தில்தான் இந்த மோதல் ஏற்பட்டது. இதில் மண்டை உடைக்கும் அளவிற்கு சண்டை முற்றியது. காங்கிரஸ் வட்டார தகவல்களின்படி கே.எஸ் அழகிரி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதற்கு தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. மாறி மாறி தாக்கிக்கொண்டு, தலையில் ரத்த காயம் ஏற்படும் அளவிற்கு மோதல் உச்சம் பெற்றது.

இளங்கோவன்
இதையடுத்தே கே.எஸ் அழகிரிக்கு எதிராக டெல்லியில் புகார் அளிக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டெல்லி சென்றனர். இந்த விவகாரம் டெல்லியில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. செல்வப்பெருந்தகை தலைமை தங்கபாலு, இளங்கோவன் மற்றும் அவரின் ஆட்கள் என்று பெரும் படையே டெல்லிக்கு சென்றது. தற்போது அந்த குழுவில் இருக்கும் இளங்கோவன்தான் ஈரோடு கிழக்கு வேட்பாளர் ஆகி உள்ளார். அதனால் இளங்கோவனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியிலேயே சிலர் வேலை பார்க்காமல் டிமிக்கி கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் என்னவோ கே. எஸ் அழகிரியை கூட வேட்பாளர் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டம் எதிலுமே கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக
இதையடுத்தே காங்கிரசை நம்பி இருக்க கூடாது என்பதற்காக ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுக தீவிரமாக பணியாற்ற தொடங்கி உள்ளது. இடைத்தேர்தல்தான் என்றாலும் கூட பெரிய அணியையே இறக்கி இங்கே தேர்தல் பணிகளை திமுக செய்ய தொடங்கி உள்ளது. இதற்காக அமைச்சர்கள் அடங்கிய 11 பேர் கொண்ட குழுவையும் திமுக நியமனம் செய்துள்ளது. கே.என். நேரு தலைமையில்தான் இங்கே தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன. எஸ். முத்துசாமி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன், அர. சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன், வி. செந்தில்பாலாஜி, ஆவடி சா.மு. நாசர், கயல்விழி செல்வராஜ், ஆகியோரும் இங்கே தேர்தல் பணிகளை செய்ய தொடங்கி உள்ளனர். மொத்தமாக பெரிய அமைச்சர்கள் அணியையே இங்கே திமுக களமிறக்க காரணம் இந்த தேர்தலை அந்த அளவிற்கு திமுக சீரியஸாக கருதுகிறது என்பதுதான்.

திமுக சீரியஸ்
அதிலும் இரவு நேரத்தில் கூட பிரச்சாரம் முடிந்த பின் திமுக நிர்வாகிகள் உட்கட்சி கூட்டங்களை நடத்தி தேர்தல் பணிகள் தொடர்பாகவும் ஆலோசனைகளை செய்து வருகின்றனர். காங்கிரஸ் மிரண்டு போகும் அளவிற்கு காங்கிரஸ் வேட்பாளருக்காக இங்கே களப்பணிக்களை செய்து வருகின்றனர். அமைச்சருக்கு 4 வார்டுகள் வீதம் ஒதுக்கப்பட்டு இருப்பதால், அந்த வார்டுகளில் தீவிரமான பணிகளை அமைச்சர்கள் செய்து கொண்டு இருக்கிறார்களாம். திமுகவின் இந்த வேகம் அதிமுக, பாஜகவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த இடைத்தேர்தல் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பின் நடக்கும் முதல் இடைத்தேர்தல். அதனால் இதில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதில் திமுக தீர்க்கமாக இருக்கிறது.
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட்












Click it and Unblock the Notifications