செங்கோட்டையனால் உயரும் மேற்கு மண்டல தவெக ஓட்டு.. இதுதான் விஜய் ஆட்டம்! அப்ப தொங்கு சட்டமன்றம் வருமா
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனின் விசுவாசிகள் நீக்கப்பட்டு, எடப்பாடியின் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டது செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.. வரப்போகும் தேர்தலில் தனக்கு சீட் தரமாட்டார்கள் என்றும், அப்படியே போட்டியிட்டாலும் தோற்கடிக்கப்படுவோம் என்ற பயம் செங்கோட்டையனுக்கு வந்துவிட்டது. மேலும், எஸ்.பி. வேலுமணியின் கையும் அங்கே ஓங்க ஆரம்பித்துவிட்டது என்று செங்கோட்டையனின் கட்சி தாவல் குறித்து பத்திரிகையாளர் மணி கருத்து கூறியிருக்கிறார்.
Behindwoods O2 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் மணி, "எடப்பாடி பழனிசாமி கடந்த ஒன்றரை ஆண்டுகளில் செங்கோட்டையனை மெல்ல மெல்ல ஓரங்கட்ட ஆரம்பித்ததுடன், செங்கோட்டையனின் ஆதரவாளர்களையும் ஓரம் கட்ட துவங்கினார்..

செங்கோட்டையன் - விஜய்
குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனின் விசுவாசிகள் நீக்கப்பட்டு, எடப்பாடியின் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டது செங்கோட்டையனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.. வரப்போகும் தேர்தலில் தனக்கு சீட் தரமாட்டார்கள் என்றும், அப்படியே போட்டியிட்டாலும் தோற்கடிக்கப்படுவோம் என்ற பயம் செங்கோட்டையனுக்கு வந்துவிட்டது. மேலும், எஸ்.பி. வேலுமணியின் கை ஓங்க ஆரம்பித்துவிட்டது.
அந்தவகையில், எடப்பாடியுடன் ஆசீர்வாதத்துடன் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர்.. எப்போதுமே சிறகுகள்தான் முதலில் வெட்டப்படும்.. இது செங்கோட்டையனுக்கு ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தன்னுடைய நீக்கம் பெரும் வேதனையை அளித்ததாக செங்கோட்டையன் பிரஸ்மீட்டில் கண்ணீர் சிந்தி அழும் அளவுக்கு சென்றுவிட்டார். அதற்கு பிறகுதான் விஜய் கட்சியில் சேர்ந்துள்ளார்.
தவெக முகம் மாறியது
செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பில், தனிப்பட்ட முறையில் அவமரியாதை செய்யப்பட்டதை முதல்முதலாக பேசியிருக்கிறார்.. இவ்வளவு வெளிப்படையாக செங்கோட்டையன் பேசியதில்லை.. செங்கோட்டையனின் சேவை அதிமுகவில் புறம் தள்ளப்பட்ட வலியால் பாதிக்கப்பட்டுள்ளார்..
செங்கோட்டையன் என்ற பழுத்த அரசியல்வாதி வருகையினால், தவெகவின் புரொபைல் மாறியிருக்கிறது.. தவெகவின் முகம் மாறுகிறது.. ஒரு பெரிய பேஸ் லிப்ட்' (Face-lift) கிடைத்துள்ளது.. செங்கோட்டையனை தவெக நன்றாக பயன்படுத்தி கொண்டால் அது கட்சிக்கு நல்லது. இல்லாவிட்டால் நஷ்டம் தவெகவுக்குதான்..
அதேசமயம் இன்றைய இளைஞர்கள் (Gen Z) மத்தியில் விஜயின் செல்வாக்கு என்ன என்பதை செங்கோட்டையன் நன்றாகவே உணர்ந்துள்ளார்..
நிர்மலா சீதாராமனுடனான சந்திப்பு
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியை அமித்ஷா சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.. அதற்கடுத்த 2 மாதங்களில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை , செங்கோட்டையன் சந்தித்து பேசியிருக்கிறார்..
அப்போது ஒரு அறிக்கை ஒன்றையும் நிதியமைச்சரிடம் தந்துள்ளார்.. அதில், அதிமுக வாக்குகளில் கணிசமானவை விஜய் பக்கம் சென்றுவிட்டதால், இந்தக் கூட்டணியால் பாஜகவுக்கு பெரிய லாபம் இல்லை, குறிப்பாக மேற்கு மண்டலத்தில் வாக்குகள் விஜய் பக்கம் போய்விட்டது, எனவே, அதிமுகவுடன் கூட்டணியால் பாஜகவுக்கும் லாபம் இல்லை, அதிமுகவுக்கும் லாபம் இல்லை" என்று சொன்னாராம்.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. எனக்கு இப்படியொரு உறுதியற்ற தகவலும் கிடைத்தது.
ஆட்டத்தை கலைக்கும் விஜய்
எனினும் களத்தை பற்றின புரிதல் செங்கோட்டையனுக்கு அதிகமாகவே உள்ளது.. குறிப்பாக மேற்கு மண்டலத்தின் களத்தை நன்றாகவே அறிந்துவைத்துள்ளார்.. அதுமட்டுமல்லாமல் அதிமுகவுக்கு அதிகப்படியான எம்எல்ஏக்களை 2021ல் தந்ததே மேற்கு மண்டலம்தான்.. அந்தவகையில் செங்கோட்டையனின் இன்றைய முடிவு, குறைந்தபட்சம் மேற்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு மேலும் பெரியதொரு சேதாரத்தை ஏற்படுத்தக்கூடும்.
அதற்காக விஜய் ஆட்சியை பிடிப்பார், முதலமைச்சர் ஆவார் என்று சொல்லவில்லை.. ஆனால், ஆட்டத்தை கலைத்துவிடுகிறார்.. ஆட்டத்தைக் கலைக்கும் சக்தியாக (Disruptor) உருவெடுக்கிறார்... இதனால் லாபம் திமுகவுக்கா? அதிமுகவுக்கா? என்பதைத்தான் நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டியிருக்கிறது.
விஜய் ஃபேக்டர் - தொங்கு சட்டமன்றம்
ஒருவேளை நான்குமுனை போட்டியில் திமுகவுக்குதான் லாபம் என்றாலும், அடுத்த 4 மாதங்களில் அரசுக்கு எதிரான உணர்வலைகள் மக்கள் மத்தியில் ஏற்பட்டால், அல்லது அரசுக்கு எதிராக நடந்தால், தமிழ்நாட்டில் முதன்முறையாக யாருக்கும் மெஜாரிட்டி இல்லாத தொங்கு சட்டமன்றத்தை நோக்கி நகரலாம். அதாவது விஜய் ஃபேக்டரால் தொங்கு சட்டமன்றம் அமைந்தால், இதுவே விஜய்க்கு ஒரு பெரிய வெற்றியாகும்.
மொத்தத்தில் செங்கோட்டையன் இணைந்ததன் மூலம், தவெக ஊடக வெளிச்சத்தை வெகுவாகப் பெற்றுள்ளது. ஆயிரம் வார்த்தைகளில் எழுதும் கட்டுரையை விட, செங்கோட்டையன் பிரஸ் மீட்டில் உட்கார்ந்திருக்கும் ஒரு போட்டோ அதிகம் பேசப்படுகிறது" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?..











Click it and Unblock the Notifications