"ஆணுறை", சீட்டுக்கட்டு.. தொடர் சீட்டிங்.. ஆன்லைனில் ஷாம்பு ஆர்டர் செய்த பெண்.. பிரித்து பார்த்தால்?
ஆன்லைனில் ஷாம்பு ஆர்டர் செய்த பெண்ணுக்கு உருளைக்கிழங்கு வந்திருந்தது
ஈரோடு: ஷாம்பு வாங்க ஆசைப்பட்டு ஆன்லைனில் ஆர்டர் செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த சம்பவம்தான் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்துவிடும்போது, அதற்கு பதிலாக வேறு பொருட்கள் டெலிவரி செய்துவிடும் கொடுமை அவ்வப்போது நடந்து விடுகிறது.
இப்படித்தான் ஒருமுறை சென்னை பள்ளிகரணையை பகுதியை சேர்ந்த முகமது அலி என்பர், ஃபேஸ்புக் பக்கத்தில் வந்த விளம்பரம் ஒன்றை பார்த்துவிட்டு, குறைந்த விலையில் செல்போன் கிடைக்கும் என்ற பேராசைப்பட்டு, 2999 ரூபாய்க்கு செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்...

வாட்ச்
பிறகு வீட்டுக்கு வந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் சீட்டு கட்டுகள் இருந்தன. இதைப்பார்த்து ஷாக்கான முகமது அலி, டெலிவரி கொண்டு வந்த நபரை பிடித்து பள்ளிகரணை ஸ்டேஷனில் ஒப்படைத்து புகார் தந்தார்.. அதேபோல கேரளாவில், அணில்குமார் என்பவர் வாட்ச் வாங்க ஆசைப்பட்டு, 2,400 ரூபாய் செலுத்தினார்.. ஆனால், வீட்டுக்கு வந்த பார்சலில் சிறிய அட்டைபெட்டிக்குள் தண்ணீர் நிரப்பப்பட்ட நிலையில் ஒரு ஆணுறையும், மற்றொரு சாதாரண ஆணுறையும் இருந்தது.

ஆணுறைகள்
இதனால் அதிர்ச்சியில் உறைந்த அவர், அந்த பார்சலை கொண்டு வந்த நபரிடம் கேட்டார். அதற்கு அவர் எனக்கு பார்சலை உங்கள் முகவரிக்கு கொண்டு கொடுக்கும் வேலைதான். ஆனால் அதில் ஆணுறை வந்தது பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லிவிட்டார்.. இப்போதும் ஒரு சம்பவம் நம் ஈரோடு மாவட்டத்தில் நடந்துள்ளது.. நசியனூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், ஈரோடு டீச்சர்ஸ் காலனியில் நிதி ஆலோசனை மையம் நடத்தி வருகிறார்.,. இவர் சில நாட்களுக்கு முன் ஆன்லைன் ஆப் மூலம் ஷாம்பு ஆர்டர் செய்திருக்கிறார்.

ஷாம்பு
ஆர்டரை பெற்றுக்கொண்ட சம்பந்தப்பட்ட நிறுவனம் அவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பார்சலை அனுப்பி வைத்திருக்கிறது.. வீட்டுக்கு வந்த ஊழியரிடம், பார்சலை பெற்றுக் கொண்ட பெண், அந்த ஷாம்புக்கான ரூ.330-ஐ அந்நபரிடம் வழங்கினார் அந்த பெண்... பிறகு பார்சலை பிரித்தபோது, கடுமையான துர்நாற்றம் வீசியது. அவர் பார்சலின் உள்ளே பார்த்தபோது அதில் ஷாம்புக்கு பதிலாக ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் அழுகிய நிலையில் உருளைக்கிழங்கு ஒன்று இருந்திருக்கிறது.

புகார்
இதை பார்த்து அதிர்ந்து போன அந்த பெண், உடனடியாக சம்பந்தப்பட்ட ஆன்லைன் நிறுவனத்துக்கு புகார் தெரிவித்தார்.. ஆனால், அந்த புகாரின்பேரில் எந்தவிதமான பதிலும் நிறுவனம் சார்பில் சொல்லப்படவில்லை என்று கூறப்படுகிறது... இப்போது யாரிடம் புகார் தருவது என்று கையை பிசைந்து கொண்டிருக்கிறார் அந்த பெண்,.. இது ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குபவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications