செல்பிக்காக பின்னாலேயே ஓடிவந்த கூட்டம்.. ஈரோட்டில் வேகவேகமாக புறப்பட்ட மேயர் பிரியா.. பரபரப்பு
ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சென்னை மேயர் பிரியாவிடம், செல்பி எடுக்க முயன்ற இளைஞர்கள் போட்டி போட்டதால் அவர் வேக வேகமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சென்னை மேயர் பிரியாவிடம், செல்பி எடுக்க முயன்ற இளைஞர்கள் போட்டி போட்டனர். இதனால் அவர் வேக வேகமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் பங்கேற்றிருந்த சென்னை மேயர் பிரியா புறப்படும்போது, பலர் அவரோடு செல்பி எடுக்க போட்டி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சிலரோடு மட்டும் செல்பி எடுத்துக் கொண்ட சென்னை மேயர் பிரியா, அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டு சென்றார்.

வாக்கு சேகரிப்பு
சென்னை மேயர் பிரியா கடந்த இரண்டு நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டிடியிடும் காங்கிரஸ் திமுக கூட்டணி வேட்பாளர். ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஈரோடு கருங்கல்பாளையம் பகுதிகளில் இளைஞர்கள், பொதுமக்கள் பலருக்கும் வீடு வீடாக சென்று நோட்டீஸ் கொடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அவருடன திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சென்று வாக்கு சேகரித்தனர். மேயர் பிரியா நேற்று டிரம்ஸ் வாசித்து விட்டு வாக்கு சேகரித்த வீடியோ வெளியாகி இருந்தது.

இளைஞர்கள் முயற்சி
இந்நிலையில் நேற்று தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது உதயநிதி ஸ்டாலினின் பிரச்சாரக் கூட்டத்தில் மேயர் பிரியாவும் கலந்து கொண்டார். பின்னர் பிரச்சாரம் முடிந்து மேயர் பிரியா அங்கிருந்து புறப்படும்போது, பலர் அவரோடு செல்பி எடுக்க போட்டி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியார் நினைவில்லம்
இதனையடுத்து சிலரோடு மட்டும் செல்பி எடுத்துக் கொண்ட சென்னை மேயர் பிரியா, அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டு சென்றார். இது தொடர்பாக சமூக ஊடங்களில் வீடியோ வெளியாகி உள்ளது. இதனிடையே மேயர் பிரியா, பெரியாரின் நினைவு இல்ல்த்திற்கு சென்றார். அங்கு புகைப்படம் எடுத்த அவர், "மானமும் அறிவும் மனிதருக்கு அழகு - என்ற பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் பிறந்த மண்ணில் அவரின் நினைவு இல்லத்திற்கு சென்று மகிழ்ந்தோம் என்று ட்வீட் போட்டிருக்கிறார்.

பிரச்சாரம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது பிரச்சாரம் களைகட்டியிருக்கும் நிலையில், திமுகவின் ஏராளமான அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முதல்வர் ஸ்டாலினும் விரைவில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். வாக்களை கவரும் பிரச்சார உக்தியில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் தொகுதி வாக்காளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications