6வது இடம் பிடித்த யூடியூபர் தீபன் சக்கரவர்த்தி.. பெற்ற மொத்த வாக்குகள் எவ்வளவு? லாரியை முந்திய மைக்!
யூடியூபர் தீபன் சக்கரவர்த்தி, முழுக்க முழுக்க டிஜிட்டல் பிரச்சாரத்தை நம்பி களத்தில் இறங்கினார்.
ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் பிரபல யூடியூபர் தீபன் சக்கரவர்த்தி 6வது இடம் பிடித்துள்ளார். அவர் மொத்தம் 349 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 77 பேர் களத்தில் இருந்த நிலையில், பிரபல யூடியூபர் தீபன் சக்கரவர்த்தி சுயேட்சையாக களமிறங்கினார். அவருக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.
நாமக்கல்லைச் சேர்ந்த தீபன் சக்கரவர்த்தி, ஊடகத்தில் செய்தியாளராகப் பணியாற்றி, பின்னர் Chennai Vlogger என்ற பெயரிலான யூடியூப் சேனல் தொடங்கி, பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அப்பகுதி மக்களின் வாழ்வியலை பதிவு செய்து வருகிறார்.

சுயேட்சை வேட்பாளர்
அரசியலில் இளைஞர்கள் அதிகமாக வர வேண்டும், தேர்தல் செயல்முறைகளை பொதுமக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்; செலவே இல்லாமல் தேர்தலை சந்திப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட குறிக்கோள்களோடு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கினார் யூடியூபர் தீபன் சக்கரவர்த்தி. மைக் சின்னத்தில் போட்டியிட்ட தீபன் சக்கரவர்த்தி 349 வாக்குகள் பெற்று ஏழாவது இடம் பிடித்துள்ளார்.

வெறும் 2 ஆயிரத்தில்
சட்டமன்றத் தொகுதியில் ஒரு வேட்பாளர் 40 லட்சம் ரூபாய் வரை தேர்தலுக்கு செலவு செய்துகொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது, ஆனால் இந்த டிஜிட்டல் உலகத்தில் செலவே செய்யாமல் தேர்தலை சந்திக்க முடியும், டெபாசிட்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் கட்டியது போக வெறும் 2 ஆயிரம் ரூபாயில் இந்த தேர்தல் பிரச்சாரத்தை டிஜிட்டல் மூலமாக முடிப்பேன் எனக் கூறியிருந்தார் சுயேட்சை வேட்பாளர் தீபன் சக்கரவர்த்தி.

ஆறாவது இடம்
இந்நிலையில், இன்று ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கையில் 15 சுற்றுகள் முடிவில் சுயேட்சை வேட்பாளர் தீபன் சக்கரவர்த்தி 6வது இடம் பிடித்துள்ளார். அவர் பெற்றுள்ள வாக்குகள் 349 ஆகும். 15 சுற்றுகள் முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,923 வாக்குகளும் பெற்றுள்ளனர். நாம் தமிழர் கட்சி 10,827 வாக்குகளும், தேமுதிக 1,432 வாக்குகளும் பெற்றன.

100 வாக்குகளை கடந்த வேட்பாளர்கள்
சுயேட்சை வேட்பாளர் முத்துபாவா 364 வாக்குகள் பெற்றுள்ளார். 349 வாக்குகள் பெற்று ஆறாவது இடத்தை தீபன் சக்கரவர்த்தி பிடித்துள்ளார். நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் தனலட்சுமி 324 வாக்குகள் பெற்று 7வது இடம் பிடித்துள்ளார். 77 வேட்பாளர்கள் களத்தில் இருந்த நிலையில் 75 பேர் டெபாசிட் இழந்துள்ளனர். அவர்களில் மொத்தமே 14 பேர் தான் 100 வாக்குகளைக் கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலை விட அதிகம்
முன்னதாக 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நாமக்கல்லில் போட்டியிட்டார் தீபன் சக்கரவர்த்தி. அப்போது லாரி சின்னத்தில் போட்டியிட்டு 249 வாக்குகளைப் பெற்றார். தற்போது ஈரோடு கிழக்கில் அதைவிட அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தவெக இணைவது நாகரிகம் அற்றது.. அமைச்சர் வன்னியரசு பேட்டி












Click it and Unblock the Notifications