இதய பாதிப்பு.. உயிருக்கு போராடும் 4 மாத குழந்தை.. நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம் - ப்ளீஸ் உதவுங்க
சென்னை: பிறந்து நான்கு மாதங்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு ஆபத்தான இதய பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் குழந்தை உயிர் பிழைக்க அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு என மருத்துவர்கள் கூறிவிட்டனர். மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும் அந்தக் குழந்தையின் பெற்றோரால் இதற்கான செலவுகளை ஏற்க முடியவில்லை. நீங்கள் மனது வைத்தால் இந்தக் குழந்தையை காப்பாற்ற முடியும்.
திருவள்ளூர் மாவட்டம் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன். இவரது மனைவி நிர்மலா. எலக்ட்ரீஷியனாக இருக்கும் தேவராஜனுக்கு நிரந்தர வருமானம் கிடையாது. தினமும் கிடைக்கும் கூலியை வைத்துதான் அவர்களின் குடும்பம் நடந்து வருகிறது. இந்நிலையில், தேவராஜன் - நிர்மலா தம்பதியருக்கு 4 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணமாகி 7 ஆண்டுகள் கழித்து பிறந்ததால் அவர்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருந்தனர். அந்தக் குழந்தைக்கு அவர்கள் சாய்ஷா எனப் பெயரிட்டனர். ஆனால், அவர்களின் மகிழ்ச்சி வெகுநாட்களுக்கு நீடிக்கவில்லை.

சாய்ஷா பிறந்து பல மணிநேரமாகியும் குழந்தையால் தாய்ப்பாலை குடிக்க முடியவில்லை. பிறகு புட்டிப்பாலை புகட்டிய போதும் குடிக்க முடியாமல் குழந்தை திணறியுள்ளது. இதையடுத்து, பிறந்து 4 நாட்களுக்கு பின்னர் குழந்தையை பரிசோதித்ததில் மிகத் தீவிரமான இதய பாதிப்பு இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். நாட்கள் செல்ல செல்ல, இதய பாதிப்பு குழந்தைக்கு அதிகமாகியுள்ளது. இதனால் பாலை கூட உறிஞ்ச முடியாத நிலைக்கு அந்தப் பச்சிளம் குழந்தை ஆளானது.

இந்நிலையில்தான், அவர்கள் அண்மையில் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் குழந்தையை காட்டியுள்ளனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், அந்தக் குழந்தைக்கு பல்வேறு இதய பாதிப்புகள் இருப்பது தெரியவந்தது. இதனால் குழந்தையின் இதயத்துக்கு சரியாக ரத்தம் போக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை தீர்க்க அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு என மருத்துவர்கள் கூறிவிட்டனர். மிக நுணுக்கமாக செய்ய வேண்டிய இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.3 லட்சம் பணம் தேவைப்படுகிறது.

மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் தேவராஜனால் அவ்வளவு பணத்தை புரட்டுவது சாத்தியம் இல்லாதது. இதனால் தங்கள் குழந்தையை எப்படி காப்பாற்ற போகிறோம் என்று தெரியாமல் தேவராஜன் - நிர்மலா தம்பதியர் தினமும் அழுது புலம்பி வருகிறார்கள். மேலும், தங்கள் நிலையை கருத்தில்கொண்டு தங்கள் குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு உங்களால் முடிந்த பணத்தை தருமாறு தேவராஜன் - நிர்மலா தம்பதியர் கோரி வருகிறார்கள். நீங்கள் நினைத்தால் குழந்தை சாய்ஷாவின் உயிரை காப்பாற்ற முடியும். உங்களால் எவ்வளவு முடியுமோ அந்த தொகையை நீங்கள் செலுத்தலாம். நீங்கள் கொடுக்கும் சிறு தொகையால், ஒரு குழந்தையின் வாழ்க்கையை திருப்பிக் கொடுக்க முடியும்.

-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications