நம்ம ஊர்ல இப்போ பட்டாசு கடைகள்.. அமெரிக்காவில் என்ன தெரியுமா.. பூபூபூபூ!
சிகாகோ: நம்ம ஊர்ல இப்போ பட்டாசு கடைகள் களை கட்டியுள்ளன.. அமெரிக்காவிலே?.. அங்கு களை கட்டியுள்ளன ஹல்லோவென் கொண்டாட்டங்கள்.
அமெரிக்க போன்ற மேலை நாடுகளில் அக்டோபர் மாதம் 31 ம் தேதி ஹல்லோவென் நாளாக கொண்டாடுகிறார்கள் .
ஹல்லோவென் கொண்டாட்டம் நெருங்கிக்கொண்டிருக்க எல்லோரும் வார இறுதியில் கடையை மொய்க்க ஆரம்பித்து விட்டார்கள். ஹல்லோவென் சிட்டி என்ற பெயரில் இதற்காகவே தனியா அந்த நேரத்தில கடைகள் திறக்கப்படுகின்றன. ஆமாங்க நம்ம தீபாவளி நெருங்கிற நேரத்தில பட்டாசு கடை போடுற மாதிரி தான் இந்த ஹல்லோவென் சிட்டி கடைகள் .
திகில் பட அனுபவம்:
அப்படி என்ன தான் இருக்குன்னு கடைக்குள்ள போய் பார்த்தால் ஒரு புதுவித அனுபவம். அந்த அனுபவத்தை பெற இந்த வீடியோவை பாருங்க. இந்த ஹல்லோவென் சிட்டிக்குள்ள போனா நமக்கு ஒரு திகில் பட தியேட்டர்க்கு போன அனுபவம் வாசலில் காத்திருக்கும். உயர உயரமான பேய் பிசாசு உருவங்கள் , ராட்சத பலூன்கள் நம்மை வரவேற்க காத்திருக்கும்.

பயங்கரமான உருவங்கள்:
ராட்சத சிலந்தி , நம்ம ஊரு ஜெகன் மோஹினி படத்தில வர மாதிரி பேய் உருவங்களை, ரத்தம் சிந்த சிந்த இருக்கும் பயங்கரமான உருவங்கள், மேல தொங்கும் வவ்வால் பொம்மைகள் , ஆளுயர பூசணிக்காய் பலூன்கள் என்று வரிசையா அடுக்கி வைக்கப்பட்டிருக்கு. அது மட்டுமில்ல உச்சக்கட்டம் என்னன்னா பிணம் மாதிரி மனித உருவ பொம்மை கிடத்தி வெள்ளைத் துணி வைத்து மூடி வச்சிருந்தது தான்.

என்ன பண்றது இதையெல்லாம்
சரி இதைஎல்லாம் வாங்கி என்ன பண்ணுவாங்கன்னு கேக்கறீங்களா, நாம கிறிஸ்துமஸ் நேரம் ஸ்டார் போட்டு வீட்டு முன்னாடி அலங்கரிக்கிற மாதிரி தான் இந்த வௌவால், சிலந்தி,பேய் உருவங்கள் எல்லாம் வீட்டு முன்னாடி தொங்க போட்டு பூசணிக்காயில் விளக்கு வைச்சு ஒளிமயமாக்கி அழகு பார்க்கிறாங்க.

மாறிடுங்க பாஸ்
வீட்டை மட்டுமல்ல அந்த ஹல்லோவென் நாளன்று எல்லோரும் தனக்கு பிடித்த கதாபாத்திரமாக மாறிவிடுகின்றனர். அதாங்க அந்த சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்ஸ்மேன் , நிஞ்சா, மெர்மைட் ,என்று காரடூன் கதாபாத்திரங்களாக மாறுவதற்காக ஆடைகள் வரிசையா அடுக்கிவைக்கப்பட்டிருக்கு இந்த கடைகளில்.

ரொம்ப பயங்கரம்
அது மட்டுமல்ல, வகை வகையான வண்ண வண்ண முகமூடிகள் ,சிலது அழகாகவும் சிலது ரொமப் பயங்கரமாகவும் இருக்கு. கலர் கலர் கண்ணாடி ,அப்புறம் தலையில் வைக்க வண்ண வண்ண விக் என்று எல்லாமே இருக்கு. சின்ன குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் இவை எல்லாமே உண்டு. மொத்தத்தில் கொஞ்சம் அழகான ஆடைகளோடு சூப்பர் மேன் ஆகவும் மாறலாம் கொஞ்சம் பயங்கரமான கோஸ்ட் ஆகவும் மாறலாம் .அபப்டியான ஒரு நாள் தான் ஹல்லோவென் . ஹல்லோவன் அன்று என்னென்ன போடலாம் எப்படி தயாராகுறாங்க ன்னு பார்க்க ஜாலியா இந்த விடீயோவை பாருங்க.
ஹாப்பி ஹல்லோவென்.
- Inkpena சஹாயா
-
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications