“தீ என்று தெரிகிறதா” பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! பாகிஸ்தானை பந்தாடிய பாண்டியா
துபாய்: பலரும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் அசத்தலான ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் இந்தியா கடைசி ஓவரில் வெற்றியை சுவைத்து இருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உயிர் மூச்சாக திகழ்கிறது கிரிக்கெட் போட்டி.
இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும் இந்தியர்களின் ஆஸ்தான விளையாட்டாக இருப்பது கிரிக்கெட்தான். என்னதான் உலகக்கோப்பை, ஐபிஎல் என பல தொடர்களை ரசிகள் கண்டுகளித்தால் அனைவரும் அதிகம் எதிர்பார்ப்பது ஒன்றைதான்.

இந்தியா - பாகிஸ்தான் போட்டி
அதுதான் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி. பல்வேறு அரசியல் காரணங்களால் இருநாடுகளிடையே நேரடி தொடர் போட்டிகள் நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற ஐசிசி தொடர் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.

ஆசிய கோப்பை
கடந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதின. டாஸ் வென்று முதலில் இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் ரிஜ்வான் 43 ரன்கள் அடித்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.

பாண்டியா பந்துவீச்சு
முஹம்மது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இல்லை என்று குறையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, பலமாக திகழ்ந்தனர் புவனேஷ்வர் குமாரும் ஹர்திக் பாண்டியாவும். புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகள் எடுக்க, பார்ட் டைம் பவுலர் என்று கூறப்பட்ட ஹர்திக் பாண்டிய 4 ஓவர்கள் வீசி 25 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார். ரிஜ்வான், இஃப்திகார் அஹ்மத், குஷ்தில் ஆகிய 3 பேர் ஹர்திக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.

பாண்டியா பேட்டிங்
பாகிஸ்தான் அணி 147 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து களமிறங்கிய இந்த அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கே.எல்.ராகுல் டக் அவுட் ஆகிய, ரோகித் ஷர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி 2 ஓவர்களில் 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் க்ரீசில் இருந்த பாண்டியா 3 பவுண்டரிகளை விளாசினார்.

நிரூபித்த பாண்டியா
கடைசி ஓவரில் 7 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் ஜடேஜா அவுட்டாக நவாஸ் ஓவரின் 4 வது பந்தில் பவுண்டரில் அடித்து அணியை வெற்றிபெற செய்தார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியை இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ஃபார்ம் அவுட், காயம் என்று இந்திய அணியில் தொடர்ந்து சேர்க்கப்படாமல் இருந்து பாண்டியா மீண்டும் வந்து மிரட்டலான ஆட்டத்தை காட்டி தன்னை நிரூபித்து இருக்கிறார்
-
கேப்டன்சியில் இருந்து விலகும் ஹர்திக்! மும்பையிடம் வாங்க முயற்சிக்கும் சிஎஸ்கே.. ஜாக்பாட் அடிக்குமா? -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications