6 மாத குழந்தை ஆனந்தவள்ளியின் இதய ஆபரேசனுக்கு உதவுங்கள்

இதய குறைபாட்டால் அவதிப்பட்டு வரும் 6 மாத பெண் குழந்தையின் அவசர சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதய குறைபாட்டால் அவதிப்பட்டு வரும் 6 மாத பெண் குழந்தையின் அவசர சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

கார்த்தி மற்றும் ஆனந்தவல்லி தம்பதிக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. இவர்கள் வேலூரில் வசித்து வருகிறார்கள். அங்கு அவர்களுக்கு 2 சென்ட் நிலம் உள்ளது. இதில் வரும் வருமானத்தை வைத்துதான் குடும்பம் நடத்தி வந்தனர். ஆனால் தற்போது லாக்டவுன் காரணமாக அந்த வருமானமும் நின்று போக அவர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.

 Help 6 month old baby of Anandavalli heart operation

இந்த நிலையில் கடந்த வருடம் டிசம்பர் 21ம் தேதி ஆனந்தவல்லிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் டிசம்பர் இறுதியில் மருத்துவமனைக்கு செக் அப் சென்று போதுதான், ஆனந்தவல்லியின் குழந்தைக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது.

அதன்படி அந்த குழந்தைக்கு Unobstructed total Anomolous pulmonary venous drainage to right Atrium at RA/SVC junction, Secundum ASD with right to left shunt, unrestricted, dilated, RA/RV, tiny mid muscular VSD, Pulmonary Hypertension உள்ளிட்ட இதயம் தொடர்பான குறைபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

 Help 6 month old baby of Anandavalli heart operation

இதனால் உடனே அந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். TAPVC repair எனப்படும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மொத்தமாக அறுவை சிகிச்சை, சிகிச்சைக்கு முன் பின் மருந்துகள், தயாரிப்பு, மருத்துவ தேவை ஆகிய மருத்துவ தேவைக்காக ரூ. 4,00,000 செலவு ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த சிகிச்சைக்கு முன்பாக ஆனந்தவல்லியின் குழந்தைக்கு மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் கொரோனா சோதனை செய்ய வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. முதலில் செய்யப்பட்ட சோதனையில் வீட்டில் யாருக்கும் கொரோனா இல்லை என்று வந்தது. ஆனால் இன்று திடீர் என்று ஆனந்தவல்லிக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டது.

 Help 6 month old baby of Anandavalli heart operation

இதனால் ஆனந்தவல்லி மற்றும் அவரின் குழந்தை மற்றும் கணவர் எல்லோரும் மருத்துவமனையில் தங்க முடியாது. அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். குழந்தையை இந்த சூழ்நிலையில் வீட்டிற்கும் எடுத்து செல்ல முடியாது.ஆனந்தவல்லியின் குழந்தைக்கு அவசர சிகிச்சை செய்ய வேண்டும். இன்னொரு பக்கம் ஆனந்தவல்லிக்கு மீண்டும் கொரோனா சோதனை செய்ய வேண்டிய கட்டாயமும் இருக்கிறது.

தற்போது அந்த குழந்தை MIOT மருத்துவமனையில் ICUல் Dr. ராபர்ட் மேற்பார்வையில் இருக்கிறது. தற்போது இந்த குழந்தையின் அவசர சிகிச்சைக்கும், தங்கும் செலவிற்கும் உடனடியாக பண உதவி தேவைப்படுகிறது.

 Help 6 month old baby of Anandavalli heart operation

அந்த குழந்தைக்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். குழந்தை உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் குழந்தையின் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.

இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+