இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 13 வயது சிறுமி ஸ்ரீமதி.. உங்களின் சிறு உதவி உயிர்காக்கும்
சென்னை: கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் 13 வயது சிறுமியின் உயிரை காப்பாற்ற உதவுங்கள். சிறு உதவி கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
பிரபஞ்சத்தில் உயிர்கள் என்பது அதிசயமான ஒன்று. அதுவும் மனித உயிர்கள் என்பது மிகவும் அற்புதமானது. ஆனால் இந்த உயிர்களை காப்பது என்பது ஒவ்வொரு நாளும் பெரும் சவாலாக இருக்கிறது. அப்படியான ஒரு சவாலைத்தான் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஸ்ரீமதி எதிர்கொண்டிருக்கிறார். இவரது குடும்பம் மிக சாதாரணமானது. ஸ்ரீமதி குழந்தையாக இருக்கும்போதே அவரது தந்தை, குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இருப்பினும் தந்தை இல்லாத குறை தெரியாமல் தாய் சீதாலட்சுமி தனது மகளை வளர்த்து வந்திருக்கிறார்.

தாய்க்கு அவரது சகோதரர் துணை நின்று அனைத்து உதவிகளையும் செய்து வந்திருக்கிறார். அன்றாடம் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது ஸ்ரீமதியின் சிரிப்பை பார்த்தால் அத்தனை கஷ்டங்களும் பறந்து போய்விடும். இப்படியாக மகிழ்ச்சியுடன் குடும்பம் வாழ்ந்து வந்த நிலையில், அந்த நாள் வந்தது. அதாவது கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீமதி பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பியபோது வழக்கத்திற்கு மாறான சோர்வுடன் இருந்திருக்கிறார்.

சுவாசிப்பதில் தொடர் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. தங்களுக்கு தெரிந்த அத்தனை மருத்துவத்தையும் பெற்றோர் செய்து பார்த்திருக்கின்றனர். ஆனால் பிரச்னை சரியாகவில்லை. பின்னர் மியாட் மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்ட முகாமில் பங்கேற்றிருந்தபோதுதான் உண்மை தெரிய வந்திருக்கிறது. அதாவது ஸ்ரீமதிக்கு பிறவி இதயநோய் இருந்திருக்கிறது. 'சப்பார்டிக் மெம்பிரேன்' எனப்படும் இது, ஒரு அரிய பிறவி நோயாகும். இதயத்தின் சுப்ரவால்வுலர் மிட்ரல் சவ்வு முதலில் பாதிக்கப்பட்டு பின்னர் இதயத்தின் முக்கியமான மூன்று பகுதிகளும் செயலிழக்க தொடங்கும்.

இதற்கு அறுவை சிகிச்சைதான் தீர்வாக சொல்லப்படுகிறது. ஆனால் அறுவை சிகிச்சை செய்ய ரூ.3.5 லட்சம் வரை செலவாகும். இவ்வளவு பெரிய தொகையை ஸ்ரீமதியின் குடும்பத்தினரால் திரட்ட முடியவில்லை. இருப்பினும் அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ஒரு சிறிய உதவி கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எனவே தாமதிக்காதீர்கள். உடனடியாக 13 வயது சிறுமியின் உயிரை காப்பாற்ற உதவுங்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications