வீங்கிய தலை.. மோசமான குறைபாட்டால் உயிருக்கு போராடும் சிறுவன்.. சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்!

ஹைட்ரோசெபாலுஸ் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுவனின் சிகிச்சைக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹைட்ரோசெபாலஸ் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 7 வயது சிறுவனின் சிகிச்சைக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள்.

இந்த சிறுமி ஹிதயா தன்னுடைய 7 வயது அண்ணன் உடன் இருக்கும் இந்த புகைப்படம் உங்கள் நாளை அழகாக்கலாம். ஆனால் கொஞ்சம் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், அந்த சிறுவன் முகமது ஹிலாலின் தோற்றத்தை பார்த்து உங்களுக்கு அதிர்ச்சி ஏற்படும். அழகு சிறுவன் முகமது ஹிலால் 6 மாத குழந்தையாக இருக்கும் போது, அவனின் தலை இயல்பை விட பெரிதாக வளர்வதை அவனது பெற்றோர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து மருத்துவமனையில் செய்யப்பட சோதனையில் அந்த சிறுவன் முகமது ஹிலாலுக்கு ஹைட்ரோசெபாலஸ் (Hydrocephalus) எனப்படும் விசித்திர குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் 7 வயது குழந்தைகளுக்கு இருக்கும் சந்தோசம் எதுவும் இல்லாமல் முகமது ஹிலால் ஒரே இடத்தில் முடங்கினான்.

''நான் என் மகனிடம் இருந்து இதுவரை கேட்ட வார்த்தைகள் எல்லாம் அம்மா, அப்பா என்பது மட்டும்தான். அதுவும் கூட சரியான குரலில் இருக்காது. மற்ற சிறுவர்கள் 7 வயதில் சந்தோசமாக பள்ளிக்கூடம் போகும் போது, விளையாடும் போதும், இயல்பாக இருக்கும் போது, முகமது ஹிலால் மட்டும் இப்படி இருப்பது வலியை தருகிறது.

அவனால் சரியாக பேச முடியாது, தலையை சரியாக திருப்ப முடியாது, மேலும் அவனால் சரியாக எழுந்து நடக்கவும் முடியாது. அவனது எதிர்காலத்திற்காக நாங்கள் நிறைய கனவு கண்டோம். ஆனால் எல்லாம் தற்போது நொறுங்கிவிட்டது போல இருக்கிறது.'' என்று முகமது ஹிலால் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதிகப்படியான திரவ குவிப்பு என்னும் பிரச்சனையால் ஏற்படும் ஹைட்ரோசெபாலஸ் (Hydrocephalus) குறைபாடு ஹிலாலின் உயிருக்கே ஆபத்தாக வாய்ப்புள்ளது. வெளிப்புறமாக இதனால் ஹிலால் தலை வீங்கி இருக்கிறது. அதே சமயம் உட்பக்கம் இவனின் மூளையில் அதீத அழுத்தம் தரப்பட்டு அவனின் செயல்பாடுகள் எல்லாம் பாதிக்கப்படுகிறது. ஹிலால் 6 மாதம் இருக்கும் போது, அவன் அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்ற வயதில் இல்லை. அது மிகவும் ஆபத்தானது.

அப்போதே அறுவை சிகிச்சை செய்வது மிகவும் கடினம், இதனால் உறுப்புகள் செயலிழக்க வாய்ப்புள்ளது. அதேபோல் அவன் கோமாவில் விழ கூட இதனால் வாய்ப்புள்ளது. அதனால் அவனின் பெற்றோர் பயந்தனர். தங்கள் குழந்தையை இழக்க அவர்கள் விரும்பவில்லை. இந்த நிலையில்தான் சென்னை போர்டிஸ் மலர் மருத்துவமனை மருத்துவர்கள், ஹிலாலுக்கு அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும், இல்லையென்றால் அவனின் உடல்நிலை குணப்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிடும், என்று எச்சரித்துள்ளனர்.

''இதேபோல் குறைபாட்டில் இருந்து மீண்டும் வந்த டெல்லி சிறுவன் ஒருவனின் கதையை படித்த போது ஹிலாலை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்தது. எங்கள் குழந்தையாலும் முடியும் என்று நாங்கள் நம்பினோம். அவனும் எல்லோரையும் போல சந்தோசமாக வாழ முடியும். அவன் தன் தங்கை ஹிதயா போல இயல்பாக இருக்க முடியும்.

நாங்கள் ஹிலாலை குணப்படுத்த முடியும் என்றுதான் நம்பினோம். ஆனால் சிகிச்சைக்கான செலவு எங்களுக்கு பெரிய அதிர்ச்சி தந்தது. ஒரு பக்கம் மருத்துவர்கள் உடனே சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டனர். இன்னொரு பக்கம் சிகிச்சைக்கு எப்படி பணம் ஏற்பாடு செய்வது என்று தெரியவில்லை.

ஹிலால் சிகிச்சைக்கு 10 லட்சம் ரூபாய் தேவை. ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில் எங்களால் அவ்வளவு பணத்தை ஏற்பாடு செய்ய முடியாது'' என்று கூறி ஹிலால் அப்பா அபுபக்கர் கண்ணீர் வடிக்கிறார். ஹிலால் அம்மாவும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல், தனது மகன் ஹிலாலுக்கு முத்தம் இடுகிறார்.

எப்படி உதவி செய்வது?

ஹிலால் அப்பாவிற்கு கோழி வளர்ப்பு மூலம் மிகவும் சொற்பமான வருமானமே வருகிறது. ஹிலால் அம்மா, தன்னுடைய வேலையை விட்டுவிட்டு, மகனை கவனித்துக் கொண்டு இருக்கிறார். அவர்களின் குடும்பத்திற்கு வேறு வருமானம் கிடையாது. ஹிலாலுக்கு Ventriculoperitoneal Shunt (VP) எனப்படும் வென்ட்ரிகுலோபெரிடோனியல் ஷண்ட் என்ற சிகிச்சையை செய்ய வேண்டும். இதில் தாமதம் செய்தால் அவனின் உயிருக்கே ஆபத்து ஏற்படும். ஹிலாலின் உடல் நிலையை நீங்கள் இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

ஹிலால் உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் ஹிலால் உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த சிறுவனின் உயிரை காத்திடும்.

இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் (பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டராகிராம்) பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+