ஓசூர் அடிச்சு தூக்கிடுச்சே! இப்படியே போனால் பெங்களூரை ஓரம்கட்டிடும்! வெளியான அறிவிப்பு! சிலிர்க்குதே
ஓசூர்: ஓசூரில் அமைய உள்ள 3வது சிப் காட்டில் உள்ள அனைத்து யூனிட்களும் விற்பனை ஆகி உள்ளன. அங்கே கட்டப்பட்ட சிப்காட்டில் அனைத்து யூனிட் விற்பனை ஆன நிலையில் அங்கே பணிகள் தொடங்கி உள்ளன. ஓசூர் பகுதிக்கு 3வதாக ஒரு சிப்காட். சூளகிரியில் 1022 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. சிப்காட் தொழில் பூங்காவின் வளர்ச்சிக்கு சுற்றுச்சூழல் அனுமதி (EC) கிடைத்த நிலையில் இங்கே கட்டுமான பணிகள் நடக்கின்றன. இதனால் ஓசூரின் வேகம் வளர்ச்சி அடைந்து உள்ளது.
இங்கே ஏற்கனவே டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. நடந்து வரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

டாடா - 12,082 கோடி ரூபாய் முதலீடு 40,500 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 40,000+ பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 20 அசெம்பிளி லைன்கள் கொண்ட புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்த வருடம் சென்னைக்கு மட்டுமின்றி வேறு பல மாவட்டங்களுக்கும் முக்கியமான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. முக்கியமாக பல மாவட்டங்களில் முதலீடுகள் செய்யப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின.
அதன்படி தமிழ்நாட்டில் இந்த வருடம் ரூ100 கோடியில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும். விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய புதிய சிப்காட் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும். இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஓசூரில் முதலீடு: முக்கியமாக ஓசூரில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. உதாரணமாக தமிழ்நாட்டில் மின்சார பேட்டரி வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து உள்ளது. இதற்காக ஓசூரில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுக்கும், ஓலா நிறுவனத்திற்கும் இடையே 7614 கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் 20 மெகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன் கொண்ட ஆலைகளை அமைக்கவும் ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த சிப்களை உற்பத்தி செய்யும் உலகிலேயே பெரிய ஆலையாக இது இருக்க போகிறது என்று ஓலா நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த ஆலைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பூங்காவில் அமைக்கப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3,111 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.
அடித்து தூக்கும் ஓசூர்: இந்த ஒப்பந்தத்தை பெற ஹைதராபாத், பெங்களூர் போன்ற நகரங்கள் முயன்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைத்தது. அங்கே ஓலா பைக் உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன உற்பத்தி மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
ஓசூர் டாடா நிறுவனம்: டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
5,000 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டு 500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஓசூர் யூனிட்டில் 15,000 பேர் பணிபுரிகின்றனர், விரிவாக்கத்திற்குப் பிறகு 25,000-28,000 ஊழியர்கள் வரை பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய ஐபோன் அசெம்ப்ளி ஆலையை ஓசூரில் டாடா உருவாக்க உள்ளது. 50,000+ பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 20 அசெம்பிளி லைன்கள் கொண்ட புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டாடா எலெக்ட்ரானிக்ஸ், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆக்சஸெரீஸ் ஒப்பந்த தயாரிப்பில் அதன் திறனை கணிசமாக விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த நிறுவனம் சமீபத்திதான் ல் விஸ்ட்ரானின் ஐபோன் அசெம்பிளி ஆலையை வாங்கியது. இந்த புதிய ஆலை =முற்றிலும் ஆப்பிள் போன் உதிரிபாகங்களுக்கானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது,.
டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு ஆலையை விரிவுபடுத்த ஆலைக்கு அருகில் உள்ள நிலத்தை இந்த ஆண்டு மே மாதம் தேடியது. போன் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்காக ஓசூரில் ஆலையை விரிவுபடுத்த தீவிரமாக முயன்றது. அதற்கான சூழ்நிலை இப்போதுதான் கைகூடி வந்துள்ளது.
என்ன தேவை?: ஓசூர் பகுதியில் முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில் பின் வரும் 10 விஷயங்கள் ஓசூருக்கு தேவையாக மாறி உள்ளது.
🔸சரியான சாலைகள் மற்றும் தளவமைப்புகள்
🔸வடிகால் வசதிகள்
🔸பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள்
🔸பொழுதுபோக்கு வசதிகள்
🔸பெங்களூருக்கு மெட்ரோ இணைப்பு
🔸சென்னைக்கு ரயில் இணைப்பு
🔸அதிக பேருந்து இணைப்பு
🔸சிறந்த கழிவு மேலாண்மை
🔸விமான நிலையம்
🔸மாநகராட்சி தரம் உயர்த்துதல்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications