ஓசூர் அருகே மின்சாரம் தாக்கி 4 பேர் பலி.. 6 பேர் படுகாயம்..பூமி பூஜைக்கு பந்தல் அமைத்த போது விபரீதம்
ஓசூர்: ஒசூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டும் பணிகளுக்கு பூமி பூஜை செய்ய பந்தல் அமைத்தபோது மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓசூர் அடுத்த தமிழக மாநில எல்லை அருகே கர்நாடக மாநிலத்திற்குட்பட்ட அத்திப்பள்ளி என்னும் ஊரில் அடுக்குமாடி கட்டிடப்பணிகள் தொடங்குவதற்கு பூமி பூஜை நடத்த பந்தல் அமைக்கும் பணியில் நேற்று 20க்கும் மேற்ப்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இன்று நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு நேற்று மாலை பந்தல் அமைக்கும் பணிகளில் தொழிலாளர்கள் முழு வீச்சில் ஈடுபட்டிருந்தனர்.
பந்தல் மேடைக்கு அருகில் சுற்றுச்சுவர் ஒட்டியவாறு மின்கம்பங்கம் இருப்பதை கவனிக்காமல் பணி செய்தபோது பந்தல் இரும்பு கம்பிகள் மின் வயரில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் ஆகாஷ்(30), மகாதேவ் (35), விசாகாந்தா(35), விஜய்(30) ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 6 தொழிலாளர்கள் படுகாயங்களுடன் அத்திப்பள்ளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்திப்பள்ளி போலிசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் பெங்களூரு (Rural) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications