செல்போன் டமால்... பைக்கில் சென்றவர் நடுரோட்டில் ரத்தக் காயங்களுடன் சாய்ந்தார்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே செல்போனில் பேசியபடியே இருசக்கரவாகனத்தில் சென்ற நபர் செல்போன் வெடித்ததில் படுகாயம் அடைந்தார்.
ஓசூர் அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் சொந்த வேலை காரணமாக ஓசூருக்கு இருச்சகர வாகனத்தில் சென்றுள்ளார்.

கிருஷ்ணகிரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே சென்ற போது அவருக்கு போன் வந்துள்ளது. இதையடுத்து செல்போனை ஹெல்மெட்டிற்குள் வைத்துக்கொண்டு பேசியவாறு அவர் சென்றுள்ளார். அப்போது திடீரென்று செல்போன் வெடித்து தலை, காது, கை பகுதியில் படுயங்களுடன் ஆறுமுகம் கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி போலீசார் அவரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி வழங்கி, பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆறுமுகம் பேசிக் கொண்டு சென்றது விவோ ஸ்மார்ட்போன் என தெரியவந்துள்ளது. சார்ஜ் குறைவாக இருக்கும் போதும், செல்போனுக்கு சார்ஜ் ஏற்றும் போதும் கால் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications