தமிழகம் வளர்ச்சியடைய கருணாநிதி ஆட்சி காரணம்.. ஓசூரில் பிரச்சாரம் செய்த சித்தராமையா பேச்சு
ஓசூர்: ஓசூர் தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷ்ஷை ஆதரித்து கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டனர்.
கர்நாடகாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள தமிழக தொழில் நகரம் ஓசூர். இங்கு தமிழர்கள் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுவோர் மிக அதிக அளவில் வசித்து வருகிறார்கள்.

எனவே கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் மூலம் ஓசூர் தொகுதி, திமுக வேட்பாளர் பிரகாஷுக்கு ஆதரவு திரட்ட கட்சி மேலிடம் முடிவு செய்தது.
இதையொட்டி நேற்று அவர்கள் திறந்த ஜீப் மூலமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் . அப்போது பேசிய சித்தராமையா, தென் மாநிலங்களில் பாஜகவால் பெரிய அளவுக்கு வளர்ச்சி பெற முடியவில்லை. ஆபரேஷன் கமலா மூலமாக பிற கட்சியினரை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைத்து வருகிறது பாஜக.
மக்கள் ஓட்டு போட்டு அந்தக் கட்சியால் தென்னிந்தியாவில் ஜெயிக்க முடியவில்லை. அதிமுகவுக்கு ஓட்டு போடுவது பாஜகவுக்கு ஓட்டு போடுவதற்கு சமம். எனவே பாஜக அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய தோல்வியை தமிழக மக்கள் பரிசாக அளிக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை ஏற்றத்தின் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமானால் திமுக தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும். தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி காலத்தில் மிகச் சிறப்பாக நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டது.

பிரித்தாளும் அரசியல் மூலமாக பாஜக ஆட்சி நடத்த முயற்சி செய்கிறது. இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே வன்முறையைத் தூண்டிவிட்டு அதன் மூலமாக ஆட்சியைப் பிடிப்பது தான் அவர்கள் அஜெண்டா. 120 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்திப்பதற்கு நரேந்திர மோடிக்கு நேரம் கிடையாது. ஆனால் அவர் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக அரசு நடத்தி வருகிறார் . இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.
-
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications