Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்வர் சென்றது வெளிநாட்டு பயணமா? இல்லை சுற்றுலாவா?.. கே பி முனுசாமி கேள்வி

Subscribe to Oneindia Tamil

ஒசூர்: முதல்வர் சென்றது வெளிநாடு பயணமா? அல்லது சுற்றுலாவா என தெரியவில்லை. விமர்சனத்திற்கு உள்ளாகாத வகையில் நடந்துக்கொள்ள வேண்டும் என ஒசூரில் கே.பி.முனுசாமி பேட்டி அளித்தார்.

Recommended Video

    கிருஷ்ணகிரி: முதல்வர் துபாய் பயணம் சுற்றுலாவா..? கேள்வி எழுப்பிய கே.பி. முனுசாமி!

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் மாநகராட்சி, தனியார் ஹோட்டலில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக அமைப்பு தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்கள் பாலகிருஷ்ணா ரெட்டி, பெஞ்சமின், அப்துல் ரகீம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

    கூட்டத்திற்கு பின்பு பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி: முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விக்கு: ஆட்சியாளர்கள் தங்கள் பகுதியில் தொழில் தொடங்க தொழில் முதலீட்டாளர்களை அணுகுவது இயல்பான ஒன்று.

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    வெளிநாட்டிற்கு செல்கிறபோது உரிய அதிகாரிகளோடு செல்லாமல் மாறாக குடும்பத்தினருடன் செல்வது முதலீடை ஈர்க்கவா? சுற்றுலாவிற்கா என தெரியவில்லை என்றார். அது போல் பாஜக அண்ணாமலை, முதல்வரின் பயணத்தை விமர்சித்தது குறித்த கேள்விக்கு: அது அவரின் கருத்து.

    நல்ல பணி

    நல்ல பணி

    மாநில முதல்வர் நல்ல பணிக்காக செல்கிறபோது விமர்சனத்திற்கு ஆட்படாமல் செல்ல வேண்டும். முதல்வருடன் அவரது மனைவி செல்வது வழக்கம்தான். ஆனால், மகன், மருமகள், மருமகன் என அனைவரும் சென்று விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளார். நகைக்கடன் தள்ளுபடி சர்ச்சை குறித்த கேள்விக்கு: 5 சவரன் குறைவாக நகைக்கடன் உள்ள அனைவருக்கும் தள்ளுபடி என தேர்தல் அறிக்கையில் கூறினார்கள்.

    1000 ரூபாய் நிதி

    1000 ரூபாய் நிதி

    தற்போது அவற்றில் பல மாற்றங்களை கொடுக்கிறார்கள். மனம் மாற காரணமாக இருந்த எந்த திட்டத்தையும் அரசு செய்யவில்லை. 2.15 கோடி லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் என்றால் எவ்வளவு என்பதை கூட கணக்கிடவில்லை. மெத்த படித்த நிதி அமைச்சர் பேசுகிறார் என்றால் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார் என்றார்.

    துபாயில் முதல்வர்

    துபாயில் முதல்வர்

    தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் துபாய் மற்றும் அபுதாபிக்கு 4 நாட்கள் பயணமாக சென்றுள்ளார். இன்றைய தினம் அவர் ஐக்கிய அரபு அமீரக முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார். ரூ 1600 கோடியில் முதலீடுகள் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+