அதோ இருக்கே ஆத்துப்பாலம்.. அங்கதான் நம்ம பெருமாள் "கேம்ப்".. 2 நாள் அங்கேதான் டேரா!
Recommended Video
ஒசூர்: இன்னும் 2 நாளுக்கு பெருமாள் ஆத்துப்பாலத்தில் இருந்து நகர முடியாது.. வழி இல்லை.. அதனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் பெருமாள் சிலையை எங்க நிறுத்தி வெச்சாலும் சரி.. அந்த பகுதி மக்கள் ஓடி வந்து பூஜை செய்து செல்பி எடுத்து கொள்கிறார்கள்.
150 டன் எடை கொண்ட பிரமாண்ட பெருமாள் சிலையை ராட்சச லாரியில் போன மாசம் ஏற்றினார்கள். பெங்களூரில் உள்ள ஒரு கோயிலுக்கு கொண்டு செல்லவே இப்படி ஏற்பாடு ஆனது.

ஆனால், எத்தனையோ இடைஞ்சல்கள், தடங்கல்கள் என்று தினம் ஒரு தடங்கல் வந்து கொண்டே இருந்தது. டயர் பஞ்சர், சாலை குறுகல், வீடு, கடைகள் இடிப்பு என நித்தம் ஒரு பிரச்சனை ஏற்பட்டது.
கடைசியாக சாமல்பள்ளம் எனும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறை மறுத்ததால் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. கடந்த 3ம் தேதி ஓசூர் நோக்கி மீண்டும் சிலை பயணம் தொடங்கியதும் பக்தர்கள் உற்சாகமானார்கள்.
ஆனால், ஓசூர் அருகே சின்னார் என்ற இடத்தில் திரும்பவும் லாரி நின்றுவிட்டது. பாதை சரியில்லை, சிற்றோடை இருக்கிறது என்று சொல்லப்பட்டது. அதற்கேற்ப லாரி சக்கரமும் மண்ணில் மாட்டிக் கொண்டுவிட்டது. இதனால் லாரியை கொஞ்சம்கூட இப்படி, அப்படி நகர்த்தவே முடியவில்லை.
இதனால் மண் சாலையை சீரமைக்கும் பணி நடந்து முடிந்து, திரும்பவும் பயணம் ஆரம்பித்தது. ஆனால் மறுபடியும் தடை.. பேரணடப்பள்ளி அருகே பெருமாள் சிலை லாரி நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அங்கு குவிந்தபடி உள்ளனர். பெருமாளுக்கு எப்பவுமே சிறப்பு பூஜைகள்தானாம்!
தென்பெண்ணை ஆற்றுப்பாலம் வழியாகத்தான் பெருமாளை கொண்டு செல்ல வேண்டும். இதனால் ஆற்றுப்பாலம் உறுதித்தன்மையுடன்தான் உள்ளதா? என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் தற்போது பெருமாள் சிலை இங்கிருந்து நகருவதற்கு வசதியாக கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறப்பையும் நிறுத்தி வைத்துள்ளனராம்.
அதனால் ஆற்றின் குறுக்கே புதிதாக மண்கொட்டி தற்காலிக பாலம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. 2 நாளில் இந்த வேலைகள் முடிந்து விடும் என்கிறார்கள். அதுக்கப்பறம் பெருமாள் இங்கிருந்து கிளம்புவார். அதுவரை அவருக்கு பூஜைகள், வழிபாடுகள், செல்பிகள்.. என களை கட்டுகிறது!












Click it and Unblock the Notifications