கர்நாடகாவின் எதிர்ப்பை.. சல்லி சல்லியாக நொறுக்கிய தமிழக அரசு.. ஓசூர் விமான நிலையம் வருது.. செம மூவ்

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: ஓசூரில் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை தமிழக அரசு மூன்று மாதங்களில் தொடங்க உள்ளது. இதற்காக அரசு நியமித்த ஆலோசகர், இரண்டு இடங்களுக்கான தடையற்ற மேற்பரப்பு (Obstacle Limitation Surfaces - OLS) ஆய்வை சமர்ப்பித்துள்ளார். இந்த ஆய்வின் அடிப்படையில், ஒரு மாதத்திற்குள் இடத்தை அரசு முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விமான நிலையம் அமைக்க Taneja Aerospace and Aviation Limited (TAAL) விருப்பம் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும், அரசு எந்த இடத்தை தேர்வு செய்கிறது என்பதை பொறுத்தே இது சாத்தியமா என்பது தெரியவரும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Hosur

OLS அறிக்கையின்படி, இரண்டு இடங்களிலும் விமான நிலையம் கட்ட சாத்தியம் உள்ளது. முதலாவது TAAL விமான ஓடுபாதையிலிருந்து 1.5 கி.மீ தூரத்திலும், இரண்டாவது ஹோசூரிலிருந்து 15.5 கி.மீ கிழக்கே சூளகிரிக்கு வடக்கிலும் அமைந்துள்ளது. ஆனால், இரண்டு இடங்களிலும் சவால்கள் உள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஓசூரில் விமான நிலையம்

இரண்டு இடங்களிலும் நிலப்பரப்பு ஏற்ற இறக்கத்துடன் பல்வேறு தடைகள் உள்ளன. இருப்பினும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் விமான நிலையம் அமைக்க முடியும். இரண்டு இடங்களின் சாதக பாதகங்களையும் அரசுக்கு அளித்து, அரசு இறுதி முடிவு எடுக்கும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விமான நிலையத்தை அமைக்க தனி விமான கட்டுப்பாட்டு மண்டலம் உருவாக்க பாதுகாப்பு அமைச்சகத்திற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இரண்டு மாதங்களில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) உடன் விரைவில் அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

வாகனம் மற்றும் மின்னணு உற்பத்தி துறையில் புதிய முதலீடுகளை ஈர்க்கவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் இந்த விமான நிலைய திட்டம். அறிவிப்பு வெளியான ஒரு வருடத்திற்கு பிறகு, தற்போது இடத்தை தேர்வு செய்யும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது.

தரமான பிளான் ஓசூர்

ஓசூரில் திட்டமிடப்பட்டுள்ள பிரத்யேக விமான நிலையத்தை அமைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தளங்களும் விமான நிலையம் அமைக்க ஏற்றவை என்று முடிவு செய்துள்ளதாக நம்பப்படுகிறது. பாதுகாப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வான்வெளியை மதிப்பிடுவதற்காக தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட தடையற்ற வரம்பு மேற்பரப்பு (Obstacle Limitation Surface - OLS) ஆய்வில், இந்த முடிவு வந்துள்ளது.

இதனால் இந்த 2 இடங்களில் ஒன்றை தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிடும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே முன்மொழியப்பட்ட ஓசூர் விமான நிலையத்திற்காக கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளியை நிறுவுவதற்கு ஒப்புதல் கோரி தமிழக அரசு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது. அதாவது இங்கே பயணிகள் விமானம் பறப்பதற்கு ஏற்ப மற்ற விமானங்களை அனுமதிக்காத வகையில் அல்லது அனுமதி பெற்று மட்டும் விமானங்களை இயக்கும் விதமாக கட்டுப்படுத்தப்பட்ட வான்வெளியை உருவாக்க ஒப்புதல் கோரி தமிழக அரசு பாதுகாப்பு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது.

வரவிருக்கும் ஓசூர் விமான நிலையத்திற்கான இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான இறுதி கட்டத்தை தமிழக அரசு நெருங்கி வருகிறது. இதையடுத்து தடை வரம்பு மேற்பரப்பு கணக்கெடுப்பு என்று அழைக்கப்படும் Obstacle Limitation Surface (OSL) surveyஐ மேற்கொள்ள ஆலோசகரை நியமிக்கத் அரசு திட்டமிட்டு வருகிறது. இந்த பகுதியில் வனப்பகுதியில் எவ்வளவு பாதுகாப்பானது, பயணிகள் விமானங்கள் செல்ல எவ்வளவு பாதுகாப்பு என்பதை சர்வே எடுக்கும் சோதனை ஆகும் இது.

சமீபத்தில்தான் பெங்களூர் விமான நிலையத்தை நிர்வகிக்கும் ஃபேர்ஃபாக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் உடன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு மேற்கொண்டு உள்ளார். பெங்களூர்விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிரேம் வாட்சாவும் இந்த சந்திப்பில் உடன் இருந்தார். ஓசூர் சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்காக Fairfax நிறுவனத்துடன் தமிழக அரசு ஆலோசனையில் ஈடுபட்டு வந்த நிலையில்தான் இந்த சந்திப்பு நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+