முழு ஊரடங்கு.. தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தம்.. மீறினால் தடியடி!
ஓசூர்: கர்நாடகாவில் இன்று 4 வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்திலிருந்து கர்நாடகா செல்லும் வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இதையும் மீறி செல்பவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் இன்று 4ஆவது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி சோதனைச் சாவடியில் தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலம் நோக்கி சென்ற இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உள்ளிட்ட வாகனங்களை அந்த மாநில போலீசார் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கின்றனர்.

பயணம்
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் மாநில எல்லைப் பகுதிகளில் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் அந்த மாநில போலீசார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்திற்கு
மாநில எல்லைப் பகுதிகளில் அம்மாநில போலீஸார் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வாகனங்கள் உள்ளே செல்லாதவாறு தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி சோதனைச் சாவடியில் தமிழகத்தில் இருந்து கர்நாடகா நோக்கி சென்ற இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் இலகுரக -வாகனங்களை கர்நாடக போலீஸார் தடுத்து மீண்டும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வருகின்றனர்.

அவல நிலை
உத்தரவை மதிக்காமல் செல்பவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி திருப்பி அனுப்பினர். தமிழகத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்கு இ பாஸ் அனுமதி பெற்று செல்பவர்கள், மருத்துவ சிகிச்சைக்கு அங்கு செல்பவர்கள் என அனைவரும் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படுவதால் மாநில எல்லைப் பகுதிகளில் ஏராளமான வாகனங்கள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்
ஆனால் வழக்கம்போல தமிழகத்திலிருந்து அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் கண்டெய்னர்கள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் கர்நாடகாவுக்கு தொடர்ந்து பயணம் செய்கின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications