அப்பா.. எழுந்திருப்பா.. எழுந்திருப்பா.. என்ன கொடுமை இது.. இவரும் தகப்பனா?
குடிகார தந்தையை எழுப்ப சிறுமி முயற்சிக்கும் வீடியோ வைரலாகிறது.
ஹூப்ளி: வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்தாலே பத்திக்கொண்டு வருகிறது எல்லாருக்கும்! இப்படியும் ஒரு தகப்பன் இருப்பாரா? என்று கூடவே எரிச்சல் கேள்வியும் எழுகிறது.
கர்நாடகத்தின் ஹூப்ளியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 2 வயது குழந்தையுடன் தந்தை அந்த பகுதியில் பிச்சை எடுக்கிறார்.
பிறகு பிச்சை எடுத்த பணத்தில் மதுக் கடைக்குப் போய் ஃபுல்லா சரக்கு ஏத்திக்கிறார். சென்னம்மாசிலை என்ற இடத்தில் அப்படியே மட்டையாகி கீழே நடுரோட்டில் விழுந்து கிடக்கிறார்.

அப்பா.. எழுந்திரு..
உலகமே தெரியாத அந்த குழந்தையோ தன் போதையில் விழுந்து கிடக்கும் தன் அப்பாவை எழுப்ப போராடுகிறது. அப்பா.. எழுந்திருப்பா.. எழுந்திருப்பா.. என்ற வார்த்தையை தவிர அந்த குழந்தைக்கு வேற வார்த்தைகள் எதுவும் வரவில்லை. தன் பிஞ்சு கைகளால் கன்னத்தை தட்டி தட்டி எழுப்புகிறது அந்த குழந்தை.

மிரண்ட குழந்தை
பிறகு சுற்றுமுற்றும் மிரண்டு பார்க்கிறது... அந்த நேரம் பார்த்து ஒரு நாய் குறுக்கே ஓடுகிறது. ஏற்கனவே பயந்து போன குழந்தை, நாயை பார்த்து இன்னும் மிரளுகிறாள். இப்படியே குழந்தை ஒரு மணி நேரம் தன் அப்பாவை எழுப்பி கொண்டிருக்கிறாள்.

வயிறு எரிகிறது
அந்த பக்கமாக போய் கொண்டிருந்த யாரோ ஒரு நபர், இந்த காட்சியை பொறுக்க முடியாமல் வீடியோவாக எடுத்து இணையத்தில் போட்டு விட்டார். இந்த வீடியோவை பார்த்தாலே வயிறு எரிகிறது.

யாரை குத்தம் சொல்றது?
வளர்க்கறதுக்கு வக்கு இல்லைன்னாலும் குழந்தைகளை பெத்துக்கிட்டு இப்படிஅல்லாடி வெக்கிற குடிகார அப்பன்களை குத்தம் சொல்றதா? இல்லை பிச்சைக்காரனையும் விடாத மதுக் கடையை குத்தம் சொல்றதா?
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications