ராத்திரியில் வெளியில் போனால் இதே கதிதான்.. பலாத்காரம் செய்வதில் என்ன தப்பு.. இளைஞரின் திமிர் போஸ்ட்

பெண் டாக்டர் பலாத்காரம் செய்தது குறித்து ஆபாச கருத்து பதிவிட்ட இளைஞர் கைதானார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ராத்திரியில் வெளியில் போனால் இதே கதிதான்.. பலாத்காரம் செய்வதில் என்ன தப்பு.. இளைஞரின் திமிர் போஸ்ட்

    ஹைதராபாத்: "பெண்கள் நைட் நேரத்தில் வெளியில போனால்..இந்த கதிதான்.. இப்படி வெளியில போற பெண்களை நாங்கள் பலாத்காரம் செய்ய கூடாதா?" என்று ஹைதராபாத் பெண்டாக்டர் எரித்து கொன்றது குறித்து இளைஞர் ஒருவர் கருத்து பதிவிட, போலீசார் அவரை அள்ளிக் கொண்டு போய்விட்டனர்!

    போன வாரம் 26 வயது பெண் டாக்டரை 4 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்து கொன்றனர். இந்த சம்பவம் தெலுங்கானா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.

    22 year old youth arrested for making vulgar comments on Facebook about telangana veterinary doctor

    நேற்றுகூட, பார்லிமென்ட்டில் எல்லா எம்பிக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையும், வலியுறுத்தலும், இந்த நான்கு பேரையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்பதுதான். குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டுமென இதுவரை சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்து போட்டுள்ளனர். இந்த குற்றவாளிகளின் குடும்பத்தினரும், "சட்டத்திற்கு உட்பட்டு அவர்களை என்ன செய்ய வேண்டுமோ, செய்யலாம்" என்று சொல்லிவிட்டனர்.

    ஆனால், இறந்து போன இந்த பெண் டாக்டர் குறித்து பேஸ்புக்கில் ஒருவர் ஆபாசமாக கருத்து பதிவிட்டார். ''பெண்கள் வெளியில் சென்றால் நாங்கள் அவர்களை வன்புணர்வு செய்யக்கூடாதா? எல்லா பெண்களும் இதுபோல வன்புணர்வு செய்யப்பட வேண்டும்,'' என மோசமான கருத்தை போட்டிருந்தார். இது பெரிய சர்ச்சையாகவும் பரபரப்பாகவும் வெடித்தது.

    உடனடியாக, ஹைதராபாத் போலீசார் அந்த நபர் யார் என்ற தகவல்களை பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து பெற்றனர். 23 வயதுடைய அந்த நபரின் பெயர் சவான் பிரகாஷ் என்பதும், நிஜாமாபாத்தின் பகிராபாத் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். இளைஞனை ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லும் வீடியோவையும் மக்கள் சோஷியல் மீடியாவில் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+