அடப்பாவமே! வாங்கிய மறுநாளே வெடித்து சிதறிய இ ஸ்கூட்டர்! ஒருவர் பலி, குழந்தைகளுக்கு பயங்கர தீக்காயம்
ஹைதராபாத்: நாடு முழுவதும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடுத்தடுத்து வெடிக்கும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கூட உயரும் அபாயம் உள்ளது.
இதன் காரணமாகப் பொதுமக்கள் மெல்ல மின்சார வாகனத்தை நோக்கித் திரும்பி வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் பயன்பாடு பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மின்சார வாகனங்கள்
இருப்பினும், கடந்த சில வாரங்களாக வரும் செய்திகள் மின்சார வாகனங்களுக்கு நல்லதாக இருக்கவில்லை. தமிழகம் தொடங்கிப் பல இடங்களில் மின்சார வாகனங்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறுவதாக வெளியாகும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில் மின்சார வாகனத்தின் பேட்டரி வெடித்து 80 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்திருந்தார். இதற்கிடையே ஆந்திராவின் விஜயவாடாவில் மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

ஆந்திராவில் பரபர
இதில் மின்சார வாகனம் வெடித்துச் சிதறியதில் 40 வயதான நசிவகுமார் பலியானார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தான் ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். ஸ்கூட்டரை வாங்கிய மறுநாளே இந்த கோர விபத்து நடந்துள்ளது. விஜயவாடாவில் குலாபி தோட்டா என்ற இடத்தில் உள்ள நசிவகுமார் வீடு உள்ளது. அவர் தனது பூம் கார்பெட் 14 ஸ்கூட்டரை இரவு நேரத்தில் வழக்கம் போல சார்ஜ் போட்டுள்ளார். அப்போது அதிகாலை 3.30 மணியளவில் ஸ்கூட்டர் திடீரென வெடித்துச் சிதறியுள்ளது.

நடந்தது என்ன
இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூர்யராவ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். நசிவகுமார் தூங்குவதற்கு முன் இரவு 10 மணியளவில் மின்சார வாகனத்தின் பேட்டரிக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது பேட்டரி திடீரென வெடித்துச் சிதறியதில் தீ ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தில் விரைவாகப் புகை சூழ்ந்தது. இதனால் மூச்சு திணறி நசிவகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மனைவி குழந்தைகள்
இந்த விபத்தில் அவரது மனைவி ஹாரதி (30), மற்றும் குழந்தைகள் பிந்து ஸ்ரீ (10), சசி (6) ஆகியோருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது. "அவர்களுக்கு 30 சதவிகித தீக்காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. ஆனால் கரும் புகையைச் சுவாசிப்பதால், அவர்களின் நிலை மோசமாக உள்ளது. மேல் சிகிச்சைக்காக, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்' என்று போலீசார் தெரிவித்தனர்.

அமைச்சர் நிதின் கட்கரி
நாடு முழுவதும் இப்படி அடுத்தடுத்து ஈ ஸ்கூட்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டு வரும் சூழலில், இது தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு சிறப்பு வல்லுநர் குழுவை அமைத்துள்ளது. இந்த குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மேலும், மின்சார வாகனங்களுக்கான தரம் குறித்த வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தவறு செய்யும் நிறுவனங்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி குறிப்பிட்டார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications