கோவையில் ஒருநாள்.. ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்ட இதயம்.. திக் திக் ஆபரேஷன்!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் மூளை சாவு அடைந்த சிறுமியின் இதயம் விமானம் மூலம் இன்று கோயம்புத்தூர் வந்தடைந்தது.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அபிநயா. 14 வயது சிறுமி இவர் மூளையில் ரத்தகசிவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அங்கு உள்ள யசோதா மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தார்.

A heart from Mumbai taken to Coimbatore for a heart transplant operation

அதனைத் தொடர்ந்து இவரது குடும்பத்தினர் இவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. அதில் இதயம் கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மும்பையைச் சேர்ந்த 40 வயது பெண்மணி ஒருவருக்கு தேவைப்பட்டது.

இதனால் இதயம் அந்த பெண்மணிக்கு தானமாக கொடுக்கப் பட்டது. இதனையடுத்து மதியம் 2 மணியளவில் ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சிறுமியின் இதயம் பாதுகாப்பாக பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லபட்டது.

இதற்காக சிறப்பு ஏற்ப்பாடாக விமான நிலையத்திலிருந்துமருத்துவமனை வரை உள்ள போக்குவரத்து அனைத்து சிக்னல்களும் காவல்துறையினர் உதவியுடன் முடக்கபட்டது. இதனையடுத்து விமான நிலையத்திலிருந்து சென்ற ஆம்புலன்ஸ் 3நிமிடங்களில் மருத்துவமனையை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஒருநாள் படத்தில் வருவது போல மிகவும் திரில்லாக இந்த மொத்த சம்பவமும் அரங்கேறி இருப்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+