அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்கள், தக்காளிகள் வீச்சு.. வீட்டுக்குள் புகுந்து பூந்தொட்டிகள் உடைப்பு!

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: புஷ்பா 2 திரைப்படம் பார்க்க சென்ற ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து இன்று நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடினர். வீட்டின் மீது இன்று கற்கள், தக்காளிகளை வீசினர். வீட்டுக்குள் இருந்த பூந்தொட்டிகள், அலங்கார செடிகள் போன்றவற்றை சேதப்படுத்தினர். மேலும் அல்லு அர்ஜுனுக்கு எதிராக கோஷமிட்டதால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. இதற்கு முந்தைய நாள் ரசிகர்கள் ஷோ ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் வெளியானது. அப்போது நடிகர் அல்லு அர்ஜுனும் குடும்பத்துடன் அந்த தியேட்டருக்கு இரவு 10 மணி ஷோவிற்கு வருகை தந்தார். அல்லு அர்ஜுன் வந்திருப்பது தெரிந்ததும், வெளியே தியேட்டர் வளாகத்தில் கூட்ட நெரிசல் உண்டானது.

actor allu arjun pushpa 2 2

சந்தியா திரையரங்கில் அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக ஒருத்தரை ஒருத்தர் முண்டியடித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு படம் பார்க்க வந்திருந்த ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். மேலும் அவரது மகன் படுகாயமடைந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த சிறுவனுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு மூளைச்சாவு ஏற்பட்டது. எனினும் முன்னதாகவே உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு 25 லட்சம் கொடுத்தார்.

மேலும் அவரது குடும்பத்துக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்றும் அல்லு அர்ஜுன் கூறியிருந்தார். எனினும் இது தொடர்பான புகாரின் பேரில் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அல்லு அர்ஜுனை போலீசார் கைது செய்தனர். ஒரு நாள் முழுக்க சிறையில் இருந்த அல்லு அர்ஜுன் மறுநாள் காலையில் ஜாமீனில் வெளிவந்தார். அப்போது பேசிய அவர் பெண் உயிரிழந்தது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம்.

ரேவந்த் ரெட்டி கோபம்:

மிகவும் வருந்துகிறேன். பெண்ணின் குடும்பத்துக்கு எப்போதும் உதவி செய்வேன் என்று கூறியிருந்தார். நடிகர், நடிகைகள் பலரும் அல்லு அர்ஜுன் கைது தேவையற்றது என்றும், அவருக்கு ஆதரவாகவும் பேசினர். மேலும் அவரை வீட்டில் போய் சந்தித்தனர். இந்த நிலையில், சட்டப்பேரவையில் இந்த விவகாரம் எழுந்தது. அப்போது மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜுனை மிகவும் தாக்கி பேசினார்.

அவர் கூறுகையில், “சந்தியா தியேட்டருக்கு வரவேண்டாம் என போலீசார் கூறியதை மதிக்காமல் அல்லு அர்ஜுன் அங்கு சென்றதாலேயே கூட்ட நெரிசல் ஏற்பட காரணம். தியேட்டருக்கு வெளியே ஒருவர் உயிரிழந்துவிட்டார் என போலீசார் கூறிய பிறகும், படத்தை முழுவதுமாக பார்த்த பிறகுதான் புறப்படுவேன் என அல்லு அர்ஜுன் கூறியுள்ளார். நீங்கள் புறப்படாவிட்டால் கைது செய்வோம் எனக் கூறி வலுக்கட்டாயமாக அழைத்த பின்னரே அவர் அங்கு இருந்து கிளம்பினார்.

சிறுவனை யாரும் பார்க்கவில்லை:

ஒரு நாள் சிறையில் இருந்ததற்கே பலரும் அவரைப் பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றார்கள். சிறையில் இருந்ததால் காலை இழந்தாரா, கையை இழந்தாரா என்ன ஆச்சு? ஒன்றுமே ஆகவில்லை. அல்லு அர்ஜுன் வீட்டுக்கு சென்ற பிறகு அவரை பார்க்க பலர் வரிசையில் நிற்கின்றார்கள். ஆனால் ஆஸ்பத்திரியில் காயமடைந்த சிறுவனை பார்க்க யாரும் போகவில்லை” என்று பேசினார்.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் கூறுகையில், ”தியேட்டரில் நடந்த நெரிசல் என்பது ஒரு விபத்து. இதில் யாருடைய தவறும் அல்ல. இது யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லை. என்னுடைய வாழ்க்கை லட்சியமே தியேட்டருக்கு வரும் மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பது தான். நாங்கள் மாநில அரசின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி தான் அடைந்திருக்கிறோம். என் மீது தவறான குற்றச்சாட்டுகளை சொல்வது தான் என்னை காயப்படுத்துகிறது” என்று கூறியிருந்தார்.

கற்கள், தக்காளி வீச்சு:

இந்த நிலையில், இன்று மாலை ஹைதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுனி ஹுப்ளி இல்லத்துக்குள் ஒரு கும்பலினர் புகுந்தனர். அங்குள்ள பூந்தொட்டிகளை அடித்து உடைத்தனர். மேலும் கற்கள், தக்காளிகளை வீட்டுக்குள் வீசினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காம்பவுண்ட் மேலே ஏறிய சில அல்லு அர்ஜுனுக்கு எதிராக கோஷமிட்டனர். இதற்கிடையே இது குறித்த போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

போலீசார் விசாரணை:

வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் அனைவரும் இளைஞர்கள் எனவும் ஒஸ்மானியா பல்கலைக்கழக கூட்டு செயற்குழு (OU JAC) என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அல்லு அர்ஜூன் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

புஷ்பா 2 ரிலீஸ் சமயத்தில் உயிரிழந்த பெண் ரேவதி மற்றும் சிகிச்சை பெற்று வரும் சிறுவனுக்கு ஆதரவாக அல்லு அர்ஜுன் நிற்க வேண்டும் எனக் கோரி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு நீதி வேண்டும் எனக் கோரி கோஷமும் எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+