நைட்லாம் தூங்க முடியலை.. அனுமன் கோவில் மியூசிக்கை நிறுத்துங்க! நடிகர் அல்லு சிரிஷ் போலீசில் புகார்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ''பக்கத்தில் உள்ள அனுமன் கோவிலில் இரவு 2-3 மணிவரை சத்தமாக மியூசிக் ஒலிக்கப்படுகிறது. இது தொல்லையாக இருக்கிறது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பியும், நடிகருமான அல்லு சிரிஷ் ஹைதராபாத் போலீசில் புகார் அளித்த நிலையில் மசூதியில் ஸ்பீக்கர் கட்டி 'அசான்’ ஒலிப்பதற்கு எதிராக புகாரளிக்க முடியுமா? என தரப்பினர் கொதித்துள்ளனர்.

actor-allu-sirish-files-complaint-and-seeks-police-action-over-hanuman-temple-music

இதுதொடர்பாக நேற்று அல்லு சிரிஷ் தனது எக்ஸ் பக்கத்தில் ஹைதராபாத் சிட்டி போலீசை 'டேக்' செய்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கோவிலில் மியூசிக் ஒலிக்கப்படும் வீடியோவை இணைத்துள்ள நடிகர் அல்லு சிரிஷ் அந்த பதிவில் கூறியிருப்பதாவது:

''நான் சேக்பேட்டையில் உள்ள அபர்ணா ஒன்-னில் வசித்து வருகிறேன். கடந்த சில நாட்களாக வினோபா நகரில் உள்ள அனுமன் கோவிலில் சத்தமாக பாடல்கள் ஒலிக்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட சத்தமாக நள்ளிரவு 2 - 3 மணி வரை பாடல்கள் ஒலிக்கப்படுகிறது. இதுபற்றி நான் ஃபிலிம் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். விநாயகர் சிலைகளை கரைக்கும் நாளான செப்டம்பர் 25ம் தேதி வரை பொறுத்திருக்கும்படி கூறினர்.

தற்போது விழா முடிவடைந்து விட்டது. ஆனாலும் சத்தமாக மியூசிக் ஒலிப்பது நிற்கவில்லை. இங்கு முதியவர்கள், குழந்தைகள், வேலைக்கு செல்லும் மக்கள் உள்ளனர். அவர்களுக்கு இது இடையூறாக உள்ளது. இதுதொடர்பாக இதற்கு முன்பு பல புகாரகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விஷயத்தை கொஞ்சம் பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறியுள்ளார்.

இதற்கு ஹைதராபாத் போலீஸ், ''இந்த விவகாரம் பற்றி பிலிம் நகர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள்'' என்று பதிலளிக்கப்பட்டுள்ளது. நடிகர் அல்லு சிரிஷின் இந்த பதிவை பார்த்த சில நெட்டிசன்கள் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக சில நெட்டிசன்கள், ''தெலுங்கானாவில் பல இடங்களில் மசூதிகளின் மேல்புறம் ஸ்பீக்கர் வைத்து ஒரு நாளைக்கு 5 முறை அசான் ஒலிக்கப்படுகிறது. அதுபற்றி ஒருமுறையாவது புகார் அளித்து இருப்பீர்களா?'' என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இப்படி சிலர் தனக்கு எதிர்ப்பு தெரிவித்தால் நடிகர் அல்லு சிரிஷ் இன்னொரு பதிவு ஒன்றை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். அதில் அல்லு சிரிஷ் அனுமன் படம் பொறித்த டீசர்ட் அணிந்து இருப்பது போலவும், கோவில் கோபுரத்தின் முன்பு நின்று எடுத்த போட்டோவையும் அந்த பதிவில் இணைத்துள்ளார்.

அதோடு அந்த பதிவில்,'' நண்பர்களே.. நானும் மதப்பற்றுள்ளவன் தான். அனுமனை வழிபடுவேன். ஆனால் அதிகாலை 2 மணிக்கு டிஜே செட்டப்பில் இசையை உரக்க ஒலிக்கவிடுவது பக்தி அல்ல. நான்புகார் செய்தது பொதுநலன் கருதியே.. பக்தியை பற்றியது அல்ல. புரிந்து கெண்டதற்கு நன்றி'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+