Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“சாமி” விக்ரமை மிரட்டியவர் இவரா? அடையாளமே தெரியாமல் மாறிப் போன கோட்டா சீனிவாச ராவ்!

Subscribe to Oneindia Tamil

ஐதராபாத்: ஒரு காலத்தில் விஜய், விக்ரம் என தமிழில் முன்னணி நடிகர்கள் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளிலும் பிரபல வில்லனாக வலம் வந்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தள்ளாத வயதிலும் தளர்ந்து நடையோடு வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

நாடாளுமன்ற தேர்தலில் 9 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசத்திலுள்ள 96 தொகுதிகளில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதோடு சேர்த்து ஆந்திராவுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெற்று வருகிறது.

Actor Kota Srinivasa Rao voted in Lok Sabha Election 2024 in Telangana

மக்களவைத் தேர்தலை பொருத்தவரை ஆந்திராவில் 25 தொகுதிகளுக்கும், தெலுங்கானாவில் 17 தொகுதிகளுக்கும் தேர்தலானது நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பல மாவட்டங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பதை பார்க்க முடிகிறது.

பிரபலங்கள் வாக்களிப்பு: நீண்ட வரிசையில் காத்திருந்து பெண்கள், முதியவர்கள், இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, எதிர்க்கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, நடிகையும் அமைச்சருமான ரோஜா, அல்லு அர்ஜுன் ஜூனியர் என்டிஆர், உள்ளிட்ட பலரும் தங்கள் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

கோட்டா சீனிவாச ராவ்: தெலுங்கானாவிலும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் ஹைதராபாத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திரைப்படங்களில் நடித்து வந்த அவர் தற்போது வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இருந்த போதும் தளர்ந்த நடையோடும் தள்ளாடியபடியும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற கோட்டா சீனிவாச ராவ் வாக்களிக்க வந்தார்.

ஜனநாயக கடமை: அவரை உறவினர் ஒருவர் கைதாங்கலாக அழைத்து வந்தார் சிறிது நேரம் வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த கோட்டா சீனிவாச ராவ் பின்னர் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது. தமிழில் விஜய்க்கும் விக்ரமுக்கும் வில்லனாக நடித்ததோடு மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் கலக்கியவர் கோட்டா சீனிவாச ராவ்.

ரசிகர்கள் பாராட்டு: குறிப்பாக சாமி படத்தில் அவரது வில்லத்தனம் மிரட்டியது கோ படத்தில் அரசியல்வாதியாகவும் நடித்திருந்தார் தொடர்ந்து காமெடி வேடங்களிலும் கலக்கி வந்த கோட்டா சீனிவாச ராவை பார்த்து தற்போது ரசிகர்கள் தங்கள் வருத்தங்களை பதிவு செய்து வருகின்றனர். எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆயிட்டாரே என அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் தள்ளாத வயதிலும் வாக்களிக்க வந்திருப்பதை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+