காங்கிரஸ் கட்சிக்கு டாடா... நாளை பாஜகவில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி...!
ஹைதராபாத்: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி நாளை பாஜகவில் இணைகிறார் நடிகையும் முன்னாள் எம்.பி.யுமான விஜயசாந்தி.
கடந்த அக்டோபரில் நடிகை குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த நிலையில் அவரை தொடர்ந்து விஜயசாந்தியும் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
இதனிடையே விஜயசாந்தி கட்சியில் இருந்து விலகியது குறித்து காங்கிரஸ் மேலிடம் பெரியளவில் அலட்டிக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

அரசியல்வாதி
நடிகையும், அரசியல்வாதியுமான விஜயசாந்தி காங்கிரஸ் கட்சியில் கடந்த 6 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு அவர் காங்கிரஸில் இணைந்த நிலையில் இப்போது அந்தக் கட்சிக்கு குட் பை சொல்லிவிட்டு பாஜகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளவுள்ளார். 2014-ம் ஆண்டுக்கு முன்னதாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பாஜக
விஜயசாந்தியை பொறுத்தவரை இப்போது புதிதாக அவர் பாஜகவில் இணையவில்லை. ஏற்கனவே கடந்த 1997-ம் ஆண்டு இவர் பாஜகவில் இணைந்து சில ஆண்டுகளில் அங்கிருந்து வெளியேறினார். இந்நிலையில் பழைய வரலாறு மீண்டும் திரும்பிய கதையாக இப்போது பாஜகவுக்கு செல்லவிருக்கிறார்.

நல்ல தோழிகள்
குஷ்புவும் விஜயசாந்தியும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஒரே காலகட்டத்தில் அங்கிருந்து விலகியிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயசாந்தி எடுத்துள்ள முடிவின் பின்னணியில் குஷ்பு இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தெலுங்கானா மாநிலம்
நாளை டெல்லியில் நடைபெறும் இணைப்பு விழாவுக்கு பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை விஜயசாந்தி சந்தித்து பேசவுள்ளார். அப்போது தெலுங்கானா மாநில அரசியல் நிலவரம் மற்றும் தெலுங்கானாவில் பாஜகவை வலிமையாக வேரூன்ற வைப்பது குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications