சம்பளம் மட்டும் ரூ.2 லட்சம்.. மொத்தம் ரூ.3.82 மாத வருமானம்.. ரோஜாவுக்கு சூப்பர் பதவி! ஜெகன் தாராளம்
Recommended Video
ஹைதராபாத்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவான நடிகை, ரோஜாவுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. மாதம், ரூ.2 லட்சம் ஊதியத்தில், அவருக்கு சூப்பர் பதவியொன்றை வழங்கியுள்ளார், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
90ஸ் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத லேடி ஸ்டார் ரோஜா. கடந்த பல வருடங்களாக நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு ஆந்திராவில் தீவிர அரசியலில் குதித்தார்.

ஆந்திராவின் நகரி தொகுதியில் 2வது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் சார்ந்த, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்தான் இப்போது ஆந்திராவில் ஆளும் கட்சியாக உள்ளது.
இந்த நிலையில்தான், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ரோஜாவுக்கு, ஆந்திர மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு கழக தலைவர் பதவியை வாரி வழங்கியுள்ளார்.
அமைச்சராகுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேபினெட்டில் ரோஜாவுக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால், அமைச்சர் பதவிக்கு ஈடாக இப்படி ஒரு பதவியை முதல்வர் வழங்கியுள்ளார். இது ரோஜா ஆதரவாளர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது பழைய செய்திதான். ஆனால் அவரது சம்பள விவரம் இப்போதுதான் வெளியே வந்துள்ளது.
ரோஜாவுக்கு, மாத ஊதியமாக, ரூ.2 லட்சம் கிடைக்கும். வாகன படி என்பதன் கீழ் ரூ .60,000, தங்குமிடத்திற்கு ரூ .50000, தனிப்பட்ட சலுகையாக, ரூ. 70000, மொபைல் கட்டணங்களுக்கு ரூ.2000 ரோஜாவுக்கு வழங்கப்படும். ஆக மொத்தம், 3.82 லட்சம் ரூபாய் ரோஜாவுக்கு கிடைக்கப்போகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications