ரோஜா விளையாடிய கபடி.. புடவையை ஏற்றி கட்டி.. கோட்டை தொட்டு கும்பிட்டு.. தெறிக்க விடும் வீடியோ
நடிகை ரோஜா கபடி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகிறது
ஹைதராபாத்: இளைஞர்கள், மாணவர்களின் மனஇறுக்கத்தை போக்க, அவர்களுடன் சேர்ந்து கபடி விளையாடினார் எம்எல்ஏ ரோஜா.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
Recommended Video
2019-ல் சட்டப்பேரவை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டவர் ரோஜா.. ஆரம்பத்திலேயே பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றார்.. ஜெகன்மோகன் ரெட்டியின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து வருபவர்.. சித்தூர் மாவட்டம் நகரி தொகுதியில்தான் ரோஜா பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்தார்.. தமிழகத்தின் அம்மா உணவகத்தை, தன்னுடைய தொகுதியில் செயல்படுத்தி அதிலும் மக்களின் மனங்களை வெகுவாக ஈர்த்தார் எம்எல்ஏ ரோஜா.

நகரி தொகுதி
அதுமட்டுமல்லாமல் தன்னுடைய பெயரில் செயல்பட்டு வரும் அறக்கட்டளை சார்பாகவும், ஏராளமான திட்டங்களையும், நன்மைகளையும் விடாமல் செய்து வருபவர்.. அந்த வகையில் இவரது ரோஜா அறக்கட்டளை சார்பில் நவம்பர் 1ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை நகரி சட்டமன்ற தொகுதியில் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. டிகிரி கல்லூரி மைதானத்தில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

மன இறுக்கம்
இந்த விளையாட்டு போட்டியை கணவர் ஆர்.கே.செல்வமணியுடன் துவங்கி வைத்தார் எம்எல்ஏ ரோஜா.. கொரோனாவால் மன இறுக்கத்தில் உள்ள மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த போட்டியை நடத்த முடிவு செய்தார்.. பச்சை கொடி காட்டி போட்டிகளை தொடங்கி வைத்ததுமே, மாணவர்களை உற்சாகப்படுத்த தானும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றார்..

இரு அணிகள்
கணவர் ஆர்.கே.செல்வமணியுடன் இணைத்து கபடி களத்தில் கபடி ஆடினார்... ஆர்.கே.செல்வமணி ஒரு அணியாகவும், ரோஜா தலைமையில் ஒரு அணியும் என 2 அணிகளும் மோதின.. இருவருமே மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு விளையாடியது, திரண்டிருந்த மக்களை வெகுவாக ஈர்த்தது.. கைகட்டி ஆரவாரம் செய்து விளையாட்டு போட்டிகளை உற்சாகப்படுத்தினர்.

கபடி போட்டி
சில மாதங்களுக்கு முன்பும், ஆந்திராவில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற நடிகை ரோஜா, அங்கிருந்த இளைஞர்களுடன் கபடி விளையாடி அசத்தியதும் தொகுதி மக்களை கவர்ந்தது.. அந்த வகையில், மாணவர்கள், இளைஞர்களின் மன இறுக்கத்தை போக்குவதற்காகவும், அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும், இணைந்து விளையாடிய கபடி போட்டியும் வீடியோவாக இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications